Advertisement

  • வீடு
  • அழகு குறிப்புகள்
  • முடி உதிர்வை கட்டுப்படுத்தக்கூடிய சூப்பரான ஹேர் பேக் ..இதை போட்டா சளி கூட பிடிக்காதுங்க

முடி உதிர்வை கட்டுப்படுத்தக்கூடிய சூப்பரான ஹேர் பேக் ..இதை போட்டா சளி கூட பிடிக்காதுங்க

By: vaithegi Thu, 27 July 2023 3:08:07 PM

முடி உதிர்வை கட்டுப்படுத்தக்கூடிய சூப்பரான ஹேர் பேக் ..இதை போட்டா சளி கூட பிடிக்காதுங்க

சாதாரணமாக நீங்கள் தலைக்கு குளித்தால் பாத்ரூம் முழுவதும் உங்களுடைய முடியாக இருக்குமா. பாத்ரூமில் தண்ணி போகும் அந்த சல்லடையில் கூட உங்களுடைய முடி போய் அடைத்துக் கொள்ளும் அளவிற்கு முடி உதிர்வு சில பேருக்கு இருக்கும்,எனவே இந்த ஹேர் பேக்கை தலையில் போட்டுக்கோங்க பிறகு தலைக்கு குளித்து பாருங்கள். உங்கள் தலைமுடி உதிர்வதில் உடனடியாக நல்ல ஒரு மாற்றத்தை பார்க்கலாம். ஆனால் ஒருமுறை போட்டதோடு இந்த ஹேர் பேக்கை விட்டு விடக்கூடாது. வாரத்தில் 2 நாள் அல்லது வாரத்தில் 1 நாளாவது இந்த ஹேர் பேக்கை தொடர்ந்து போட்டு வர முடி உதிர்வது சீக்கிரம் நின்று முடி கொஞ்சம் கொஞ்சமாக வளர தொடங்கி விடும்.

ஹேர் பேக்குக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள். முட்டை, தேங்காய், கருவேப்பிலை. மூன்றே பொருட்கள்தான். முட்டை வாசமடிக்குமே என்றெல்லாம் கேட்கக்கூடாது. தலைமுடி நன்றாக வளர வேண்டும் என்றால் இதை நீங்கள் செய்துதான் ஆக வேண்டும். சிலபேர் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் ஹேர் பேக் போடுவாங்க. இந்த ஹேர் பேக்குக்கு நீங்கள் முட்டையின் மஞ்சள் கருவோடு சேர்த்து தான் ஹேர் பேக் போட வேண்டும்.

hair bag,phlegm , ஹேர் பேக்,சளி


சரி, முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கோங்க. அதில் தேங்காய் துருவல் 1 கைப்பிடி அளவு, கருவேப்பிலை 3 கொத்து போட்டு ரொம்ப கொஞ்சமா தண்ணி ஊத்தி இதை அரைத்து பிழிந்து பால் எடுக்க வேண்டும். தேங்காயுடன் கருவேப்பிலை சேர்த்து அரைப்பதால், இந்த பால் வெளிர்பச்சை நிறத்தில் வரும். பச்சையும் வெள்ளையும் கலந்த அந்த பால் பார்ப்பதற்கு ரொம்ப ரொம்ப அழகான கலரில் இருக்கும்.

hair bag,phlegm , ஹேர் பேக்,சளி

அதனையடுத்து இப்போது இந்த பிழிந்து எடுத்த பாலோடு ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். கையில் அடித்து கலக்க முடியவில்லை, என்றால் அந்த மிக்ஸி ஜாரிலேயே, இந்த தேங்காய் பாலை ஊற்றி, ஒரு முட்டையையும் உடைத்து ஊற்றி, ஒரு ஓட்டு ஓட்டினால் ஹேர்பேக் கிடைத்துவிடும்.

இந்த ஹேர் பேக்கை தான் தலையில் போட போறீங்க. தலைமுடியில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் வைத்து சிக்கு எடுத்து விடுங்கள்‌. பிறகு இந்த லிக்விட் ஆக இருக்கும் ஹேர் பேக்கை தலையில் அப்ளை செய்யுங்கள்.இந்த ஹேர் பேக் அரை மணி நேரம் தலையில் இருந்தால் கூட உங்களுக்கு சளி பிடிப்பதற்கு வாய்ப்பு குறைவு. சளி பிடிக்கக்கூடிய பொருட்கள் எதுவுமே நாம் இதில் சேர்க்கவில்லை. அவ்வளவுதான் 20 நிமிடமோ அல்லது 30 நிமிடமோ கழித்து மயில்டான ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து பாருங்க. தலை முடி உதிர்வில் இருக்கும் வித்தியாசத்தை நிங்கள் நன்றாகவே கண்டுபிடிக்கலாம்.

Tags :