Advertisement

சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும் பாதாம் எண்ணெய்

By: Nagaraj Sat, 08 July 2023 11:35:52 PM

சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும் பாதாம் எண்ணெய்

சென்னை: பாதாம் எண்ணெய்யில் வைட்டமின் ஏ மற்றும் பிற சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பொருட்கள் அதிகமுள்ளது. பாதாம் எண்ணை அதனுடைய பல்வேறு சருமத்தையும் மேம்படுத்தும் நன்மைகளுக்காக எல்லோராலும் பாராட்டப்படுகிறது.

இது உங்கள் சருமத்திலிருந்து உங்களுடைய இயற்கையான பொலிவை வெளிக் கொண்டு வருகின்றது. மேலும் இது சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி உங்களுடைய சருமத்திற்கு மென்மையான பளபளப்பை அளிக்கின்றது.

almond-oil,composition,rosewater,skin,softness, ,கலவை, சருமம், பாதாம் எண்ணெய், மென்மை, ரோஸ்வாட்டர்

இந்த இயற்கையான பாதாம் எண்ணெயை, நீங்கள் விரும்பிய தோற்றத்தை பெற பயன்படுத்தவும். இயற்கையாகவே பளபளப்பான மற்றும் மென்மையான சருமத்தை அடைய இந்த எண்ணையை பயன்படுத்தக்கூடிய வழிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

அரை தேக்கரண்டி தேன் மற்றும் பாதாம் எண்ணெயை ஒன்றாக எடுத்து இரண்டையும் நன்றாக கலக்கவும். இந்தக் கலவையை உங்களுடைய முகத்தில் தடவவும். அதன் பின்னர் இந்தப் பூச்சை ஒரு இரவு முழுவதும் உலர விடவும். மறுநாள் காலையில், வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். அழகான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெற இதை வாரத்திற்கு 2 முதல் 3 முறை முயற்சி செய்யவும்.

1 தேக்கரண்டி அலோ வேரா ஜெல்லுடன் ½ தேக்கரண்டி பாதாம் எண்ணெயை சேர்க்கவும். இந்தக் கலவையை சுமார் 5-10 நிமிடங்கள் வரை உங்கள் சருமத்தின் மீது மெதுவாக மசாஜ் செய்யவும். அதன் பின்னர் ஒரு மிருதுவான சுத்தப்படுத்தி மற்றும் வெதுவெதுப்பான நீர் வைத்து உங்களுடைய முகத்தை சுத்தம் செய்யவும். அழகான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெற இதை வாரத்திற்கு 2 முதல் 3 முறை முயற்சி செய்யவும்.

Tags :
|