Advertisement

சருமத்தை மென்மையாக மாற்ற உதவும் கற்றாழை, வெள்ளிரிக்காய் ஃபேஸ்பேக்

By: Nagaraj Wed, 25 Nov 2020 5:29:10 PM

சருமத்தை மென்மையாக மாற்ற உதவும் கற்றாழை, வெள்ளிரிக்காய் ஃபேஸ்பேக்

சருமத்தை பளபளப்பாக மாற்ற உதவுகிறது கற்றாழை ஜெல், வெள்ளரிக்காய் பேஸ்பேக்.

சருமத்தினைப் மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் யாருக்குத்தான் இருக்காது. அந்த எண்ணத்தினை இப்போது நிறைவேற்றும் வகையிலான ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்

தேவையானவை:

கற்றாழை ஜெல்- கால் கப்
வெள்ளரிக்காய்- அரை துண்டு
ஓட்ஸ்- 2 ஸ்பூன்

cucumber,oats,glow,skin,tenderness ,வெள்ளரிக்காய், ஓட்ஸ், பளபளப்பு, சருமம், மென்மை

செய்முறை: வெள்ளரிக்காயினைத் தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஓட்ஸினை மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

அடுத்து கற்றாழை ஜெல், வெள்ளரிக்காய் பேக் மற்றும் ஓட்ஸினைக் கலந்து நன்கு கொழகொழப்பாக அரைத்துக் கொள்ளவும். இந்த ஃபேஸ்பேக்கினை முகம், கை, கால் என அனைத்து இடங்களிலும் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டுக் கழுவினால் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும் என்பது உறுதி.

Tags :
|
|
|