Advertisement

சருமத்தை பாதுகாக்கும் அருமையான இயற்கை அளித்த பொருள்தான் சோற்றுக்கற்றாழை

By: Nagaraj Tue, 27 Dec 2022 11:25:33 PM

சருமத்தை பாதுகாக்கும் அருமையான இயற்கை அளித்த பொருள்தான் சோற்றுக்கற்றாழை

சென்னை: நம்முடைய சருமத்தை பாதுகாக்கும் அற்புதமான ஒரு இயற்கை பொருள் சோற்றுக்கற்றாழை. உடலில் ஏற்படக்கூடிய காயங்களை விரைவில் ஆற்றக்கூடிய தன்மை கொண்டது.

பாத வெடிப்பு மற்றும் பாத எரிச்சல் உள்ளவர்கள் இரவு படுப்பதற்கு முன்பு கற்றாழையின் நுங்கு பாகத்தினை பாதத்தின் அடியில் தடவிகொண்டு படுத்தால் இந்த நோய் குணமாகும். வறண்ட முகம் இருப்பவர்கள் கற்றாழை ஜெல்லை முகத்தில் தேய்த்து கழுவி வந்தால் உங்கள் முகம் பளிங்கு போல ஜொலிக்கும்.

கற்றாழை ஜெல்லை மோரில் கலந்து குடித்தது வந்தாலே உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் முகத்தில் ஏற்படும் கருந்திட்டுகள் மறைந்து விடும்.

aloe vera,acne,moisture,balances,skin diseases ,கற்றாழை, முகம்பொலிவு, ஈரப்பதம், சமன் செய்கிறது, சரும நோய்கள்

கற்றாழையை தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.எனவே நோய் வராமல் தடுக்கலாம்.

.தலைமுடி வளர்ச்சி குறைவாக உள்ளவர்கள் கற்றாழை சாறெடுத்து அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 45 நாட்கள் தொடர்ந்து வெயிலில் காய வைத்து தேய்த்து வந்தால் தலைமுடி நன்கு செழித்து வளரும். கற்றாழையில் உள்ள ஜெல்லை சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உங்கள் இளமை பருவம் நீண்ட நாள் வரை நிலைக்கும்.

முகத்திலுள்ள தழும்புகள்,கரும்புள்ளிகள், உலர்ந்த சருமம் என எந்த சரும நோய்கள் எதுவாக இருந்தாலும், கற்றாழை சாற்றை தினமும் தேய்த்துவர வர முகம் பொலிவு பெறும். இன்றைய காலத்தில் உருவாக்கப்படும் அனைத்து அழகு சாதன பொருட்களின் தயாரிப்பிலும் கற்றாழை தவறாது இடம் பெறுவதுகிறது. இது சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன் சரும நோய்களையும் நீக்குகிறது.

Tags :
|