Advertisement

அனைத்து வகையான காயங்களுக்கு சிறந்த மருந்தாக விளங்கும் சோற்று கற்றாழை

By: Nagaraj Tue, 07 Feb 2023 11:27:11 PM

அனைத்து வகையான காயங்களுக்கு சிறந்த மருந்தாக விளங்கும் சோற்று கற்றாழை

சென்னை: சோற்றுக்கற்றாழை அனைத்து வகையான காயங்களுக்கு சிறந்த மருந்தாகும். தொடர் ஆய்வுகளின் படி, தோல் பராமரிப்பு; வெட்டுக்கள், தீக்காயங்கள், வேணீர் கட்டி, உறைவு மற்றும் கதிர்வீச்சு எரிதல் ஆகியவற்றில் சிகிச்சைமுறைகளை இது அதிக பயனுள்ளதாக ஆக்கும்.

அல்சர், அழற்சி குடல் நோய்கள் மற்றும் மலச்சிக்கல் போன்ற இரைப்பை குடல் பிரச்சனைகளை சரி செய்வதற்கு சோற்றுக்கற்றாழை களிம்பு மற்றும் மர பால் பயன் படுத்தப்படுகின்றன.கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை கருங் கற்றாழ, செங்கற்றாழ, இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு.

இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.

அது மட்டும் இல்லாமல் தளிர்பச்சை இளம்பச்சை கரும்பச்சை எனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழை முதிர்நதவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன.இன்றைய அனைத்து அழகுசாதனப் பொருட்களின் தயாரிப்பிலும் தவறாது இடம் பெறுவது கற்றாழைதான்.

aloe-vera,dark-spots,medicinal,scars,sunburn , கரும் புள்ளிகள், சோற்றுக்கற்றாழை, தழும்புகள், மருத்துவக்குணம், வெயில்

இதன் சாறு சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன், சர்ம நோய்களையும் குணப்படுத்துகிறது.முகத்திலுள்ள கரும்புள்ளிகள், தழும்புகள், வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.

ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.சோற்றுக்கற்றாழை களிம்பு பயன்படுத்தினால் ஆரோக்கியத்திற்கு எந்த அச்சுறுத்தலையும் கொடுக்காமல் வாய் புண்களை தவிர்த்து, சரி செய்ய பயன் உள்ளதாக இருக்கும்.

மேலும் இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது.கற்றாழை கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும்.

Tags :
|