Advertisement

உங்கள் சருமம் மேலும் பளிச்சிட... இயற்கை வழி டிப்ஸ்!!!

By: Nagaraj Mon, 11 May 2020 10:34:59 PM

உங்கள் சருமம் மேலும் பளிச்சிட... இயற்கை வழி டிப்ஸ்!!!

சருமத்தை பாதுகாக்கவும், அழகாக்கவும் இயற்கை பொருட்களே போதும். இதோ உங்களுக்கான டிப்ஸ்

மஞ்சள் - வெள்ளரி

மஞ்சளில் இருக்கக்கூடிய ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் சருமத்தில் ஏற்படக்கூடிய அலர்ஜிகளிலிருந்து நம்மை காத்திடும். வெள்ளரியை பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட வேண்டும். நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம்.

to brighten the face,oatmeal powder,aloe,cucumber,turmeric ,முகம் பளிச்சிட, ஓட்ஸ் பவுடர், கற்றாழை, வெள்ளரி, மஞ்சள்

கற்றாழை
கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை ஃபிரஸ்ஸாக வைத்திருக்க உதவுகிறது. வெள்ளரிச்சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து தினமும் இரவு படுப்பதற்கு முன்னால் தடவிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவி விடலாம். இது சருமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மட்டுமல்ல சரும சுருக்கங்கள் ஏற்படாமலும் தடுத்திடும்.

to brighten the face,oatmeal powder,aloe,cucumber,turmeric ,முகம் பளிச்சிட, ஓட்ஸ் பவுடர், கற்றாழை, வெள்ளரி, மஞ்சள்

ரோஜா இதழ்கள்- பன்னீர்

உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும். பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

வேப்பிலையும், வெள்ளரியும் முதலில் ஒன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் தனியாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னரத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதனை முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்து வந்தால், உங்கள் முகம் பளிச் பளிச்தான்.

Tags :
|