Advertisement

எலுமிச்சையில் இத்தனை அழகு நன்மைகளா? கண்டிப்பா பயன்படுத்தி பாருங்க!

By: Monisha Wed, 09 Dec 2020 1:51:18 PM

எலுமிச்சையில் இத்தனை அழகு நன்மைகளா? கண்டிப்பா பயன்படுத்தி பாருங்க!

இயற்கை அழகு குறிப்பில் எலுமிச்சைக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. எலுமிச்சையில் நிறைந்துள்ள உள்ள வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளிள், புற ஊதா கதிர்கள் சேதத்திலிருந்து நமது சருமத்தை பாதுகாக்கிறது.

உலர்ந்த சருமத்தை ஈரப்பதமாக்குவதில் எலுமிச்சை சாறு உதவி புரிகிறது. இதில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் செழுமை வறண்ட சருமத்தை சரி செய்து, இயற்கையான பளபளப்பை தருகிறது. இதற்கு சம அளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, உலர்ந்த சரும பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் நன்றாக கழுவவும்.

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சை சற்றை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவிட வேண்டும். இதனை ஒரு நாள் விட்டு தொடர்ந்து செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

lemon,natural,beauty,dry skin,blackspots ,எலுமிச்சை,இயற்கை,அழகு,உலர் சருமம்,கரும்புள்ளி

எலுமிச்சையை வைத்து ஃபேஷியல் கூட செய்யலாம். அதற்கு ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றுடன், 1/4 கப் ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் எண்ணெய்யை சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஃபேஷியல் செய்தால், சருமம் பொலிவாவதோடு, ஈரப்பசையுடனும் இருக்கும்.

எலுமிச்சை சாறு மயிர்க்கால்களை வலுப்படுத்தி, முடியின் வளர்ச்சியைத் தூண்டும். எலுமிச்சை சாற்றின் அமிலத்தன்மை கூந்தலின் pH-ஐ சமப்படுத்த உதவுகிறது, இதனால் பொடுகு வளர்ச்சியைத் தடுக்கிறது.

எலுமிச்சை சாற்றில் உள்ள கிருமி நாசினிகள் பண்புகள் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடுகின்றன. முகப்பருவில் எலுமிச்சை சாற்றை தவறாமல் பயன்படுத்துவது வடுக்கள் மறைய உதவுகிறது.

Tags :
|
|