Advertisement

பவுண்டேஷன் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்போ இது உங்களுக்குத்தான்!

By: Monisha Wed, 03 June 2020 12:28:09 PM

பவுண்டேஷன் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்போ இது உங்களுக்குத்தான்!

பவுண்டேஷனை பூச கைவிரல்களை பயன்படுத்துவது, வேகமான வழியாக தோன்றலாம், ஆனால் இது சருமத்தில் கோடுகளை உண்டாக்கும். இத்தகைய பயன்பாடு உங்கள் அடிப்படை மேக்கப் சீரில்லாமல் தோன்றச்செய்யும். இதற்கு மாறாக பியூட்டி பிலெண்டர் அல்லது பவுண்டேஷன் பிரெஷ் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

முழு கவரேஜ் பவுண்டேஷன் பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்கள் கழுத்துப்பகுதியிலும் பயன்படுத்த மறக்க வேண்டாம். பொதுவாக உங்கள் கழுத்து உங்கள் முகத்தை விட, சற்று நிறம் குறைவாக இருப்பதால், கழுத்துப்பகுதியில் பவுண்டேஷன் பயன்படுத்தாமல் இருந்தால், முகம் மற்றும் கழுத்து இடையே பளிச் என வேறுபாட்டை எடுத்துக்காட்டும்.

மாய்ஸ்சரைசர் பயன்படுத்திய உடன் அது உலர்வதற்கு போதிய நேரம் அளிக்க வேண்டும். இல்லை எனில், மேக்கப் சீரற்று தோன்றும். பவுண்டேஷனை பயன்படுத்துவதற்கு முன் மாய்ஸர்சைசர் முழுவதுமாக உலர சில நிமிடங்களாவது காத்திருக்க வேண்டும்.

beauty foundation,beauty blender,foundation fresh,moisturizer ,அழகுக்குறிப்புகள்,பவுண்டேஷன்,பியூட்டி பிலெண்டர்,பவுண்டேஷன் பிரெஷ்,மாய்ஸ்சரைசர்

உங்களுக்கு எண்ணெய் பசை மிக்க சருமம் எனில், உங்கள் முகத்தில் இருந்து கூடுதல் பளபளப்பை அகற்ற மேட்டே பவுண்டேஷனை பயன்படுத்தவும். இறுதியில் மேக்கப்பை சீராக்க மறக்க வேண்டாம்.

பவுண்டேஷனுக்கு முன் கன்சீலர் பயன்படுத்த வேண்டும் என சொல்லப்படுவது தவறானது. பவுண்டேஷன் போதுமானதாக இல்லாத போது கூடுதல் கவரேஜ் அளிப்பது தான் கன்சீலரின் நோக்கம். எனவே, பவுண்டேஷனை முதலில் பயன்படுத்திவிட்டு பின்னர் குறைகளை சரி செய்ய கன்சீலரை பயன்படுத்துவதே சரியான வழியாக இருக்கும்.

Tags :