Advertisement

நீங்கள் வேக்ஸிங் செய்து கொள்பவர்களா..? உங்களுக்காக சில குறிப்புகள்!

By: Monisha Tue, 02 June 2020 1:28:44 PM

நீங்கள் வேக்ஸிங் செய்து கொள்பவர்களா..? உங்களுக்காக சில குறிப்புகள்!

உடலில் தேவையற்ற முடிகளை நீக்க வேக்ஸிங் செய்து கொள்பவர்களா..? நீங்கள் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்

செய்ய வேண்டியவை:
வேக்ஸிங் கிரீம், லோஷன், ஸ்ட்ரிப் என வாங்கினால் அவற்றின் பின்குறிப்புகளை படித்துவிட்டு உங்கள் சருமத்திற்கு ஏற்ப வாங்குங்கள். அதில் கொடுக்கப்பட்டுள்ள பின்குறிப்புகளை முறையாகப் பின்பற்றுங்கள்.

வேக்ஸிங் செய்யும் முன் முடி உள்ள இடத்தை எண்ணெய், பிசுபிசுப்பு, அழுக்குகள் இல்லாமல் சுத்தம் செய்துவிட்டு தொடங்குங்கள். அதேபோல் வேக்ஸிங் செய்த பிறகு மாய்ஸ்சரைஸர் அப்ளை செய்வதை மறவாதீர்கள். இது எரிச்சலைக் கட்டுப்படுத்துத்துவதோடு, ஈரப்பதம் அளிக்கும்.

beauty tips,waxing,waxing cream,oily skin,important things ,அழகு குறிப்புகள்,வேக்ஸிங்,வேக்ஸிங் கிரீம்,எண்ணெய் சருமம்

வேக்சிங் செய்யும் முன் ஸ்கிரப்பிங் அல்லது மசாஜ் செய்தால் முடியின் வேர்கள் சிலிர்த்து இரத்த ஓட்டம் இருக்கும். இதனால் எளிமையாக முடிகளை நீக்கிவிடலாம். வலியும் இருக்காது.

எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு முடி எளிதில் வெளியேறாது. அவர்கள் வேக்ஸிங் ஸ்ட்ரிப் பயன்படுத்தினால் அந்த இடத்தில் பவுடர் தேய்த்துவிட்டு செய்தால் எண்ணெய் இருக்காது.

வேக்ஸிங் செய்யும் போது பொறுமை மிக அவசியம். ஒரு இடத்தில் அமர்ந்து நேரம் ஒதுக்கி பொறுமையாக செய்ய வேண்டும்.

beauty tips,waxing,waxing cream,oily skin,important things ,அழகு குறிப்புகள்,வேக்ஸிங்,வேக்ஸிங் கிரீம்,எண்ணெய் சருமம்

செய்யக் கூடாதவை:
மிகவும் சிறிய அதாவது 1/4 இஞ்ச் கொண்ட முடிகளை வேக்ஸிங் மூலம் அகற்ற முயற்சிக்காதீர். இது கடுமையான வலியை ஏற்படுத்தும்.

வேக்ஸிங் கிரீம், லோஷனை பயன்படுத்தும்போது அதன் வெப்பநிலை எவ்வாறு உள்ளது என டெஸ்ட் செய்துவிட்டு முழுவதும் அப்ளை செய்யவும். கடுமையான எரிச்சல், வெப்பநிலை சருமத்தை பொசுக்கிவிடும். சரும நிறத்தை மாற்றிவிடும்.

புண், காயங்கள் இருந்தால் வேக்ஸிங் செய்வதை தவிருங்கள்.

Tags :
|