Advertisement

கை, கால்கள் கருமையாக இருக்கிறதா?...அப்போ இது உங்களுக்குத்தான்!

By: Monisha Mon, 15 June 2020 12:01:04 PM

கை, கால்கள் கருமையாக இருக்கிறதா?...அப்போ இது உங்களுக்குத்தான்!

பொதுவாக எல்லாரும் முக அழகில் தான் அதிக அக்கறை காட்டுவோம். ஆனால் முகம் மட்டும் பளிச்சென்று இருந்து, கை, கால்கள் கருமையாக இருந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. எனவே கை, கால்களுக்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டியது அவசியம்.

இளநீர்
இளநீர் கூட கை, கால்களை வெள்ளையாக்க உதவும். அதற்கு வாரத்திற்கு இரண்டு முறை அல்லது தினமும் இளநீரை கைகளில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சீக்கிரம் கருமை நீங்கும்.

முட்டை வெள்ளைக்கரு
உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் என்றால், முட்டையின் வெள்ளைக்கருவைப் பயன்படுத்துங்கள். அதுவும் வாரத்திற்கு 2 முறை முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து, கை, கால்களில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இதன் மூலம் சருமத்தில் உள்ள கருமை விரைவில் அகலும்.

தயிர்
தயிரும் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும். இதற்கு தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் மற்றும் ஜிங்க் தான் காரணம். மேலும் தயிரை தினமும் கை, கால்களுக்கு தடவி மசாஜ் செய்து வர, சரும வறட்சியும் நீங்கும்.

beauty,arms,legs,coconut,tomato,lemon ,அழகு,கைகள்,கால்கள்,இளநீர்,தக்காளி,எலுமிச்சை

சீரகம்
சீரகத்தை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, பின் குளிர வைத்து அந்நீரால் கை, கால்களை தினமும் பலமுறை கழுவ வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

தக்காளி
தக்காளியை அரைத்து அதனை கை, கால்களில் தடவி ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வருவதன் மூலம், சரும நிறத்தை மேம்படுத்தலாம்.

எலுமிச்சை
எலுமிச்சையின் ஒரு துண்டை எடுத்து, கை, கால்களில் தேய்த்து, பின் கழுவ, அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால் கருமை விரைவில் நீங்கும். ஆனால் எலுமிச்சையை பயன்படுத்திய பின், கை, கால்களுக்கு மாய்ஸ்சுரைசர் எதையேனும் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

உருளைக்கிழங்கு
வெள்ளையான சருமம் வேண்டுமானால், உருளைக்கிழங்கை சாறு எடுத்து, அந்த சாற்றினை தினமும் கை, கால்களில் தடவி உலர வைத்து, பின் நீரில் நனைத்து பஞ்சு கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.

Tags :
|
|
|
|