- வீடு›
- அழகு குறிப்புகள்›
- சருமத்திற்கு ஸ்கர்ப் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
சருமத்திற்கு ஸ்கர்ப் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
By: Nagaraj Fri, 06 Oct 2023 1:50:10 PM
சென்னை: முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள என்ன செய்யணும்... என்ன செய்யக்கூடாது என்று தெரியுங்களா?
இன்றைய காலத்தில் முகப்பரு, கரும்புள்ளிகள், கருவளையங்கள் போன்றவை இல்லாமல் சுத்தமாக இருக்கும் முகத்தை காண்பது என்பது அரிதானது.
அவற்றை நீக்குவதற்கு என்னதான் அழகு நிலையங்களுக்குச் சென்று செய்தாலும், சருமத்தில் இருந்து அவை முழுவதும் நீங்கிவிடுவதில்லை. மேலும் எவ்வளவு தான் விலை உயர்ந்த அழகுப் பொருட்களை பயன்படுத்தினாலும், இதற்கான ஒரு நல்ல முடிவு கிடைக்க பல நாட்கள் ஆகின்றன.
எனவே அழகான முகத்தை விரைவில் இரண்டே நாட்களில் பெறுவதற்கு சில அழகான டிப்ஸ் இருக்கிறது. முகத்தை அடிக்கடி குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கிவிடும். மேலும் வெளியே செல்வதற்கு முன்பும், வீட்டிற்கு வந்த பின்பும் முகத்தை ஃபேஸ் வாஷ் வைத்து கழுவிட வேண்டும்.
இவற்றால் சரும துளைகளில் உள்ள இறந்த செல்கள் வெளியேறிவிடும். அதிலும் பாடி ஜெல் மற்றும் சோப்புகளை பயன்படுத்தினால், சருமத்துளைகளில் அடைப்பு ஏற்பட்டு, முகப்பருக்கள் வந்துவிடும். ஆகவே குளிக்கும் போது தவிர, மற்ற நேரங்களில் சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
முகத்தை சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். அதிலும் அந்த துணியை சூடான நீரில் நனைத்து பிழிந்து, பின் துடைக்க வேண்டும். மேலும் அவ்வாறு செய்யும் போது, அந்த துணியை நீரில் நனைத்து பிழிந்ததும் முகத்தில் வைத்து, ஒரு நிமிடம் வைக்க வேண்டும். இதனால் முகத்திற்கு ஒரு சிறிய ஸ்டீம் செய்தது போல் இருக்கும்.
இதனை தொடர்ந்து செய்து வந்தால், 2 நாட்களில் சருமம் நன்கு பொலிவோடு காணப்படும். முக்கியமாக முகத்தை கழுவும் போது குளிர்ந்த நீர் தான் சிறந்தது, அப்போது சூடான நீரை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால், அழுக்குகள் சருமத்திலேயே தங்கிவிடும்.
கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் கைகளை கழுவாமல் எப்போதும் முகத்தை தொடக்கூடாது. ஏனெனில் கைகளில் எப்போதும் கிருமிகள், பாக்டீரியாக்கள் இருக்கும். ஆகவே சுத்தம் மிகவும் முக்கியம்.
சருமம் சுத்தமாகவும், அழகாகவும் இருக்க, வாரத்திற்கு ஒரு முறையாவது சருமத்திற்கு ஸ்கரப் செய்ய வேண்டும். அதிலும் சர்க்கரை ஸ்கரப் மிகவும் சிறந்தது. அதற்கு ஒரு டீஸ்பூன் சர்க்கரையுடன் சிறிது நீரை ஊற்றி நன்கு கலந்து, முகத்திற்கு ஸ்கரப் செய்ய வேண்டும்.
பின் அதனை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் நன்கு சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.