Advertisement

பேன் தொல்லையை போக்க உதவும் கருஞ்சீரக எண்ணெய்

By: Nagaraj Sun, 07 May 2023 12:33:09 PM

பேன் தொல்லையை போக்க உதவும் கருஞ்சீரக எண்ணெய்

சென்னை: பெண் குழந்தைகளின் தலையில் உள்ள பேன் தொல்லைதான். இந்தத் தொல்லை சில பெரியவர்களுக்கும் உண்டு. முன்பெல்லாம் தாய்மார்கள் வீட்டில் இருந்தார்கள். அதனால் குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்து, பேன் சீப்பு போட்டு வாரி, ஈறு சீப்பால் ஈர்த்து, பேன்களை ஒழித்தார்கள்.

ஆனால், இன்றைக்கு தாய்மார்களும் வேலைக்குப் போவதால், கவனிக்க முடிவதில்லை. பள்ளிச் செல்லும் குழந்தைகளும், டீன்ஏஜ் பெண்களும் வாரம் ஒருமுறை மட்டுமே தலைக்குக் குளிக்க முடிகிறது. விளைவு? தலையில் தூசும், அழுக்கும் சேர்கிறது. வியர்வைப் பிசுபிசுப்பு, ஒருவித வாடை போன்றவற்றால் பேன்கள் எளிதாக உருவாகி விடுகின்றன.

பேன்கள் அதிவிரைவில் பரவக்கூடியன. உடனே முட்டையிட்டு, குஞ்சு பொரித்துவிடும். இதனால் கூந்தல் மட்டுமல்லாது சீப்பும் சுத்தமாக இருக்க வேண்டும். பேன் போக்கும் தைலத்தை எப்படித் தயாரிப்பது என்று பார்ப்போம்

தேவையானவை: தேங்காய் எண்ணெய் – 1 கிலோ, கருஞ்சீரகம் – 400 கிராம், துளசி – 50 கிராம்.

lice infestation,black fennel,chia seed,hair,remedy ,பேன் தொல்லை, கருஞ்சீரகம், சீயக்காய், தலைமுடி, தீர்வு

செய்முறை: சுத்தமான தேங்காய் எண்ணெயை அடுப்பில் வைத்து, மிதமான தணலில் காய்ச்ச வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கருஞ்சீரகம் போட வேண்டும். சடசடப்பு ஒலி கேட்கும். ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும். இருபத்து நான்கு மணி நேரம் கழித்து எண்ணெயை வடிகட்டி சுத்தமான பாட்டிலில் அடைத்து கொள்ளுங்கள்.

பெரிய பல் கொண்ட மர சீப்பால் அழுந்த வாரவும். கைப்பிடியளவு பேன் போக்கும் எண்ணெயை மயிர்க்கால்களிலும், கூந்தல் முழுக்கவும் தேய்க்கவும் நாற்பது நிமிடம் ஊறவிட்டு, தூய சீயக்காய் கொண்டு அலசவும் வெந்நீர் பயன்படுத்திக் குளிக்கவும். ஒரு டவலை இறுகக் கட்டிக்கொண்டு, உலரவிட்டுத் தட்டினால் பேன்கள் செத்து விழும். வாரத்தில் இருமுறை தொடர்ந்து தலைக்குத் தேய்த்துக் குளித்தால் நல்ல பலன் தெரியும்.

இந்த எண்ணெயை, பேன்கள் அடியோடு நீக்கும்வரை பயன்படுத்த வேண்டும். பேன்கள் இல்லை என்றால், இந்த ஆயிலை உபயோகிக்க கூடாது.

Tags :
|