Advertisement

தலை முடி வெள்ளை நிறமாக மாறுவதை தடுக்கும் கருப்பு மிளகு!!

By: Monisha Mon, 27 July 2020 4:52:41 PM

தலை முடி வெள்ளை நிறமாக மாறுவதை தடுக்கும் கருப்பு மிளகு!!

கருப்பு மிளகு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளது. பொடுகு மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்சினைக்கு தீர்வு காண கருப்பு மிளகையும் பயன்படுத்தலாம். சிலருக்கு இளம் வயதிலேயே வெள்ளை நிற முடி எட்டிப்பார்க்கும். சாம்பல் நிறத்திலும் காட்சியளிக்கும். கருப்பு மிளகுடன் தயிர் கலந்து தலைமுடிக்கு மசாஜ் செய்துவிடலாம். கருப்பு மிளகில் செம்பு நிறைந்திருப்பதால் கூந்தல் முடி முன்கூட்டியே வெள்ளை நிறமாக மாறுவதை தடுக்கும்.

தயிர் தலைமுடியை ஈரப்பதமாக்கும். மேலும் வைட்டமின் சி குறைபாட்டை போக்கும். ஒரு கப் தயிருடன் 2 டீஸ்பூன் கருப்பு மிளகு தூள் கலந்து கொள்ளவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு குழைத்துக்கொள்ளவும். அதனை உச்சந்தலையில் அழுத்தி தடவவும். பிறகு கூந்தல் முழுவதும் தடவி மசாஜ் செய்துவிட்டு அரை மணி நேரம் கழித்து கூந்தலை கழுவிவிடலாம்.

head hair,white color,pepper,dandruff,hair loss ,தலை முடி,வெள்ளை நிறம்,மிளகு,பொடுகு,முடி உதிர்தல்

பொடுகு தொல்லையில் இருந்து விடுபட கருப்பு மிளகுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து உபயோகிக்கலாம். ஒரு டீஸ்பூன் கருப்பு மிளகு தூளுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் கலந்துகொள்ளவும். அதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளவும். அதனை உச்சந் தலையில் தடவிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து கழுவிவிடலாம். வாரம் இருமுறை செய்துவந்தால் பொடுகு தொல்லையில் இருந்து தப்பித்துவிடலாம். மிளகில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. தலையை சுத்தமாக வைத்திருக்க உதவும். மீண்டும் பொடுகு உருவாகாமல் தடுக்கும்.

நீண்ட அடர்த்தியான கூந்தல் முடியை பெறுவதற்கும் மிளகை உபயோகிக்கலாம். அது மயிர்க்கால்களின் வளர்ச்சியை தூண்ட உதவும். கருப்பு மிளகுடன் ஆலிவ் எண்ணெய்யை கலந்து காற்று புகாத பாட்டிலில் மூடி வைத்துக்கொள்ளவும். இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த எண்ணெய்யை தலை முடியில் தடவிவிட்டு 30 நிமிடங்கள் கழித்து கழுவிவிடலாம். இது முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். ஆலிவ் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய்யையும் பயன்படுத்தலாம். அது தலைமுடியை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

Tags :
|