Advertisement

முகம் பொலிவோடு திகழ ப்ளீச்சிங்... எளிமையான வழி உங்களுக்காக!!!

By: Nagaraj Tue, 25 Oct 2022 11:43:37 PM

முகம் பொலிவோடு திகழ ப்ளீச்சிங்... எளிமையான வழி உங்களுக்காக!!!

சென்னை: முகம் பொலிவோடு பளிச்சென்று இருக்க ப்ளீச்சிங் செய்வது சிறந்த முறையாகும். அதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

1 டேபிள் ஸ்பூன் தேனில், 1 1/2 டேபிள் ஸ்பூன் க்ரீம் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

1 சிட்டிகை மஞ்சள் தூளில், சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் தடவி நன்கு காய வைத்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவலாம்.

blackheads,bleaching,face,natural,skin ,இயற்கை, கரும்புள்ளிகள், சருமம், ப்ளீச்சிங், முகம்

2 டேபிள் ஸ்பூன் பாலில், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல் வரும் வரை நன்கு கலந்து, முகத்தில் தடவி காய வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.

ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சந்தன பொடி, 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் பளிச்சென்ற முகத்தைப் பெறலாம்.

Tags :
|