Advertisement

பாத வெடிப்பை சரி செய்யும் பவுடர் தயார் செய்யலாமா? வாங்க!!!

By: Nagaraj Sat, 08 July 2023 11:34:16 PM

பாத வெடிப்பை சரி செய்யும் பவுடர் தயார் செய்யலாமா? வாங்க!!!

சென்னை: இயற்கை முறையில் பாத வெடிப்பை சரி செய்யும் பவுடர் தயார் செய்வது எப்படி என்று தெரியுமா?

நிறைய பெண்களுக்கு உடல் சூட்டினால் கால் பாதங்களில் அரிப்பும், பிளவும் காணப்படும். சிலருக்கு ரத்தம் கொட்டும். வலியால் துடிப்பார்கள். இது வருடக்கணக்கால் இருந்தால் கால்கள் மட்டும் இல்லாமல் உள்ளங்கைகளிலும் வெடிப்புகள் பரவும். இதை சரி செய்ய பவுடர் தயார் செய்வோம் வாங்க.

தேவையானவை: மருதாணி – 1 கிலோ, தூள் மஞ்சள் – ¼, வசம்புத் தூள் – 100 கிராம்.

dirt,foot eruption,good effect,henna,remedy,turmeric, ,அழுக்கு, தீர்வு, நல்ல பலன், பாத வெடிப்பு, மஞ்சள், மருதாணி

மருதாணி உடலுக்குக் குளிர்ச்சி கொடுக்கக்கூடியது. மஞ்சள் கிருமிநாசனி மட்டுமல்ல; அழகுதரக் கூடியது. வசம்பு இதுவும் நுண்புழு கொல்லி, பாத வெடிப்புக்குக் காரணமான பாக்டீரியாவை அழிக்கும். இந்த மூன்று மூலிகைகளையும் தனித்தனியாக அரைத்து, சலித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து, இரவில் பாத வெடிப்பு உள்ள இடத்தில் தடவி, மறுநாள் தண்ணீரில் கழுவிக்கொள்ள வேண்டும். இதைத் தினமும் உபயோகிப்பதால் நல்ல பலன் கிடைக்கும். பாத வெடிப்பு உள்ளவர்கள் அதிக நேரம் ஈரத் தரையில், நீரில் புழுங்கக் கூடாது.

வெடிப்பு இடுக்குகளில் அழுக்கோ, நோய்த்தொற்றோ ஏற்படாதவாறு பாதங்களைப் பாதுகாக்க வேண்டும்.

Tags :
|
|
|