Advertisement

உங்கள் அழகை மேம்படுத்த உதவும் கேரட் பேஸ் பேக்

By: Nagaraj Mon, 26 Sept 2022 6:39:52 PM

உங்கள் அழகை மேம்படுத்த உதவும் கேரட் பேஸ் பேக்

சென்னை: உங்கள் முகத்தின் அழகை இன்னும் அதிகமாக காண்பிக்க கேரட் பேஸ் பேக் அதிகளவு உதவுகிறது. முகத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது. கேரட் உடலுக்கு ஆரோக்கியம் தரும் எண்ணற்ற குணநலன்களை கொண்டிருக்கிறது.

இதே போன்று அழகு குறித்த பராமரிப்பிலும் அதிக அளவு உதவுகிறது. முகத்தின் கருமை நிறம் முதல் இளவயதிலேயே முகத்தில் உண்டாகும் சுருக்கம் வரை அனைத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி கேரட்டுக்கு உண்டு. எதற்கு எப்படி பயன்படுத்தினால் பலனை அழகாக பெற்றுவிடலாம் என்பதை தெரிந்துகொண்டால் போதும். தினம் ஒரு கேரட் வாழ்நாள் முழுக்க உங்கள் முகத்தை பேரழிகியாக காண்பிக்கும். கேரட்டில் இருக்கும் பீட்டா கரோட்டின், கரோட்டினாய்டு, ஆன்டி ஆக்சிடண்ட் எல்லாமே உள்ளுறுப்புகளுக்கு மட்டுமல்ல சரும அழகுக்கும் உதவுகிறது.

உடலில் கொலாஜன் சுரப்பு குறைந்தால் சரும சுருக்கங்கள் எளிதில் அடையும். இந்த சுரப்புக்கு வைட்டமின் சி தேவை. கேரட்டில் இருக்கும் வைட்டமின் சி இந்த கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதால் சருமத்தில் சுருக்கங்கள் உண்டாவது தடுக்கப்படுகிறது. சருமம் ஜொலிஜொலிப்புடன் இருக்க தினம் ஒரு கேரட் சாறு குடித்தால் கூட போதும். கேரட் மாஸ்க் சருமத்தில் இருக்கும் மூன்று அடுக்கு வரை சென்று சுத்தம் செய்யகூடியது.

youth,skin,carrot,vitamin a,oil,helps ,இளமை, சருமம், கேரட், வைட்டமிடின் ஏ, எண்ணெய் பசை, உதவுகிறது

10 முறை ஃபேஸ் மாஸ்க் செய்து பொலிவு தரும் முகத்தை இந்த கேரட் மாஸ்க் ஒரே முறை தந்துவிடும். கேரட் பாதிஅளவு இருந்தால் போதும் கேரட்டை விழுதாக மசித்து அதனுடன் சுத்தமான தேன் கலந்து இரண்டையும் நன்றாக குழைத்து கொள்ளவும். தேவையெனில் காய்ச்சாத பால் சிறிது விட்டு முகம், கழுத்து பகுதியில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், நிறம் உடனடியாக மறைவதை பார்க்கலாம். சிறந்த ஃபேஷியல் எஃபெக்ட் என்று சொல்லகூடிய பேக் இது. கேரட்டில் இருக்கும் வைட்டமின் ஏ சருமத்தின் எண்ணெய்பசையை அகற்ற உதவுவதோடு சருமத்துக்கு பளபளப்பையும் கொடுக்கிறது. முகத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது.

Tags :
|
|
|
|