Advertisement

கூந்தல் பளிச்சென்று மின்ன உதவும் ஆமணக்கு எண்ணெய்

By: Nagaraj Sat, 17 June 2023 11:12:23 PM

கூந்தல் பளிச்சென்று மின்ன உதவும் ஆமணக்கு எண்ணெய்

சென்னை: அழகு பராமரிப்பில் பயன்படுத்தப்படும் ஆமணக்கு எண்ணெய் சருமம் மற்றும் கூந்தலுக்கு நல்ல அழகை பெற்றுத் தருகிறது. இளமையை பாதுகாக்க ஆமணக்கு எண்ணெய் தான் சிறந்த தீர்வாக உள்ளது.

இந்த எண்ணெய்யை ஒரு சில பொருட்களோடு சேர்த்து பயன்படுத்தினால் இளமை மாறாமல் இருக்கலாம். 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை எடுத்து, அதை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் தடவவும். இதை அரை மணி நேரம் சென்று கழுவி விடலாம். இந்த முறையை 1 நாளைக்கு 2 முதல் 3 முறை செய்து வந்தால் இளமையை அப்படியே பாதுகாக்கலாம்.

can be obtained,castor oil,changing,wrinkles,youth, ,ஆமணக்கு எண்ணெய், இளமை, சுருக்கங்கள், பெறலாம், மாறும்

1 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் தடவி 20 நிமிடத்திற்கு பின் கழுவவும். இந்த குறிப்பை தினமும் 1 முறையாவது செய்து வந்தால் முக சுருக்கங்கள் மறைந்து, இளமை தோற்றம் நீடிக்கும்.

1 ஸ்பூன் பன்னீரை எடுத்து கொண்டு அதனை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இவ்வாறு செய்து வருவதால் முகத்தின் சுருக்கங்கள் மறைந்து இழந்த இளமையை நீங்கள் மீண்டும் பெறலாம்.

Tags :
|