Advertisement

சருமத்திற்கு ஏற்றவாறு லிப்ஸ்டிக் தேர்வு செய்யுங்கள் அழகு கூடும்

By: Nagaraj Sun, 05 Nov 2023 12:54:48 PM

சருமத்திற்கு ஏற்றவாறு லிப்ஸ்டிக் தேர்வு செய்யுங்கள் அழகு கூடும்

சென்னை: பேஷன் உலகில் மேக்கப் முக்கிய இடம் வகிக்கிறது. என்னதான் மேக்கப் செய்தாலும் லிப்ஸ்டிக் இல்லாமல் மேக்கப் முடிவடையாது. உங்களின் மேக்கப்பை உயர்த்திக் காட்டுவதே லிப்ஸ்டிக் தான். அப்படிப்பட்ட லிப்ஸ்டிக்கை உங்களின் சருமத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

முதலில் சரியான லிப்ஸ்டிக் வண்ணத்தைத் தேர்வு செய்வதற்கு முன்பு உங்கள் சருமத்தின் நிறம் என்ன என்பதைக் கண்டறியுங்கள். அதாவது சருமத்தின் நிறங்கள் 5 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. பால் நிற வெள்ளை சருமம், வெள்ளை சருமம், நடுத்தர நிற சருமம், பழுப்பு நிற சருமம் மற்றும் கருமை நிற சருமம் ஆகும்.

பால் வெள்ளை மற்றும் வெள்ளை நிற சருமம் கொண்டவர்கள் பிங்க், கோரல், பீச், நியூடூ மற்றும் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை தேர்வு செய்யலாம். நடுத்தர நிற சருமம் கொண்டவர்கள் ரோஸ், பெர்ரி, செர்ரி சிவப்பு, மற்றும் மெவ் நிற லிப்ஸ்டிக்கை தேர்வு செய்யும் போது மிக அழகாகக் காட்சியளிப்பார்கள். பழுப்பு நிற சருமம் கொண்டவர்கள் கோரல், டீப் பிங்க், பிரைட் ரெட் போன்ற வண்ணங்களைத் தேர்வு செய்யலாம்.

fashion,lipstick,makeup,skin,color ,பேஷன்,லிப்ஸ்டிக்,மேக்கப்,சருமம்,நிறம்

ஆனால் பிரவுன் மற்றும் வைல்ட் போன்ற வண்ணங்களைத் தவிர்க்கலாம். கருமை நிறம் கொண்டவர்கள் பிளம், கேரமல், ஒயின் போன்ற வண்ணங்களைத் தேர்வு செய்யலாம்.

உங்கள் சருமத்தின் வெப்பநிலையைப் பொருத்தும் நீங்கள் உங்களின் லிப்ஸ்டிக்கை தேர்வு செய்யலாம். மொத்தம் மூன்று வகையான சரும வெப்பநிலையில் உள்ளன.

அதாவது குளிர்ந்த சருமம், வெப்பமான சருமம் மற்றும் நடுத்தர சருமம் ஆகும். குளிர்ந்த சருமம் கொண்ட பால் நிற வெள்ளை மற்றும் வெள்ளை நிறம் கொண்டவர்கள் மோச்சா அல்லது நியூடூ லிப்ஸ்டிக்கும், நடுத்தர நிறம் கொண்டவர்கள் பிங்க் அல்லது கிரண்பெர்ரி வண்ணங்களையும், பழுப்பு மற்றும் கருமை நிறம் கொண்டவர்கள் ரூபி அல்லது ஒயின் நிற லிப்ஸ்டிக்கை தேர்வு செய்யலாம்.

Tags :
|
|