Advertisement

ஆரோக்கியமான பொலிவான முகம் பெற சிட்ரஸ் பழங்கள்!!

By: Monisha Mon, 22 June 2020 3:54:04 PM

ஆரோக்கியமான பொலிவான முகம் பெற சிட்ரஸ் பழங்கள்!!

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்து இருப்பதால் இது உடலுக்கு மிகவும் நல்லது. அதுமட்டுமல்லாது நம் சருமத்துக்கும் அதிக பலன்களை கொடுக்கும். சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி இருப்பதால் விரைவில் முகம் முதுமை அடையவதை தடுக்கும். சிட்ரஸ் பழங்களில் உள்ள சிட்ரிக் அமிலம் உங்கள் தோல் பளபளப்பாக உதவுகிறது.

ஆரஞ்சு: ஆரோக்கியமான பொலிவான முகம் வேண்டுமா? அப்போ நிச்சயம் உங்களுக்கு இந்த சிட்ரஸ் பழம் தேவை. முகத்தில் இருக்கும் தேவையற்ற டெட் செல்களை அகற்றி, முகம் சுருக்கம் அடையாமல் அழகிய பொலிவை ஆரஞ்சு பழம் கொடுக்கும். பழம் என்றால் உள்ளுயிருக்கும் உண்ணக்கூடிய பழம் மட்டுமல்ல வெளியிருக்கும் தோலும் சேர்த்து தான். தோல்களை உலர வைத்து அரைத்து ஃபேஸ் பேக்காக பயன்படுத்துங்கள்.

citrus fruits,vitamin c,beauty,lemon ,சிட்ரஸ் பழங்கள்,வைட்டமின் சி,அழகு,எலுமிச்சை

எலுமிச்சை: 100 கிராம் எலுமிச்சை பழத்தில் 53 கிராம் வைட்டமின் சி சத்து இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? எலுமிச்சையுடன் தேன் சேர்த்து நீங்களே முக பொலிவிற்கான ஃ பேஸ் பேக்கை செய்யலாம். கரு வளையம் போன்ற தேவையற்ற செல்களை இது நீக்கும்.

சாத்துக்குடி: ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போலவே சாத்துகுடி தோலிலும் ஆன்டி-ஆக்சிடன்ட் நிறைந்துள்ளது. எனவே இந்த பழமும் உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.

கினோவ் பழம்: ஆரஞ்சு பழம் போலவே இருக்கும் இந்த பழம் சிட்ரஸ் பழத்தின் ராஜா எனக் கூறப்படும். இந்த பழத்தை உட்கொண்டாலே அதிக நன்மை பெறலாம்.

Tags :
|