Advertisement

முடி உதிர்வு பிரச்னைகளுக்கு தேங்காய் பால் கிரீம் ஹேர்பேக் அளிக்கும் தீர்வு

By: Nagaraj Sat, 19 Aug 2023 11:22:12 PM

முடி உதிர்வு பிரச்னைகளுக்கு தேங்காய் பால் கிரீம் ஹேர்பேக் அளிக்கும் தீர்வு

சென்னை: மீண்டும் முடி வளர அதே சமயம் நெருக்கமாக முடி திக்காக வளர விரும்பினால் இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் ஒரு தீர்வு கிடைக்க சூப்பரான ஹேர் பேக்கை உபயோகிக்கலாம்.

இந்த ஹேர் பேக்குக்கு நமக்கு தேவையான ஒரே ஒரு பொருள் தேங்காய். அந்த ஹேர் பேக்கை எப்படி தயார் செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

amazing,coconut milk,hairback,kesam,smooth, ,கேசம், தேங்காய்பால், மிருது, வியக்க வைக்கும், ஹேர்பேக்

முதலில் 1/2 மூடி அளவு தேங்காயை எடுத்து துருவி மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்றாக அரைக்க வேண்டும். அரைத்த இந்த தேங்காயை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி எடுத்தால் திக்கான தேங்காய்ப்பால் நமக்கு கிடைக்கும். அதை அப்படியே ஒரு கிண்ணத்தில் ஊற்றி மூடி போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே வைத்து விடுங்கள்.

அதாவது 8 மணி நேரம் இந்த தேங்காய்ப் பால், அப்படியே இருக்கலாம். பிரிட்ஜில் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வெளியிலேயே வையுங்கள். எட்டு மணி நேரம் கழித்து இந்த தேங்காய் பாலை திறந்து பார்த்தால், தயிர் போன்ற திரவம் நமக்கு கிடைத்திருக்கும். அடியில் தண்ணீர் அப்படியே தங்கி இருக்கும்.

இதை கரண்டியை வைத்து கலந்து விடக்கூடாது. அப்படியே ஒரு வடிகட்டியில் இதை ஃபில்டர் செய்து கொள்ளுங்கள். தண்ணீர் அனைத்தும் வடிகட்டி விடும். மேலே கிரீமியாக கோக்கனட் கிரீம் கிடைத்திருக்கும். இது தான் நம் தலை முடிக்கு தேவையான கோக்கனட் க்ரீம் ஹேர் பேக்.

Tags :
|
|