Advertisement

சாப்பாட்டுக்கு மட்டுமல்ல உங்கள் அழகையும் மேம்படுத்தும் கொத்தமல்லி தழை

By: Nagaraj Fri, 15 May 2020 11:39:53 AM

சாப்பாட்டுக்கு மட்டுமல்ல உங்கள் அழகையும் மேம்படுத்தும் கொத்தமல்லி தழை

சாப்பாட்டின் ருசியை உயர்த்தும் கொத்தமல்லி தழை உங்கள் முகத்தின் அழகுக்கும் உறுதுணையாக இருக்கும் என்பது தெரியுங்களா. கொத்தமல்லி தழையை எப்படி பயன்படுத்தலாம் என்று தெரிந்து கொள்ள சில டிப்ஸ்...

முகம் மற்றும் சருமப் பாதுகாப்பு குறித்து நாளுக்குநாள் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. பலவகையான பழங்களையும், மூலிகைகளையும் ஃபேஷ் பேக்காக பயன்படுத்தி வருகின்றனர். இப்போது, கொத்தமல்லி தழையிலும் ஃபேஷ் பேக் தயாரிக்கலாம்.


coriander,egg yolk,tomato juice,lemon juice ,கொத்தமல்லி தழை, முட்டை வெண்கரு, தக்காளிச்சாறு, எலுமிச்சை பழச்சாறு

அதாவது, புதிய கொத்தமல்லி தழையை நன்றாக பசை போல அரைத்து அதனுடன் கற்றாழைச்சாறு சேர்த்து தோல் மீது போட்டு வர தோலில் ஏற்படும் சுருக்கம், தோலில் உண்டாகும் தழும்பு குணமாகும். கொத்தமல்லி தழையுடன் எலுமிச்சை பழச்சாறு விட்டு நன்றாக பசைபோல் அரைத்து இதை முகத்தில் உண்டாகும் கரும்புள்ளி, பருக்கள் இவைகளின் மீது தினந்தோறும் போட்டுவர அவைகள் மறையும்.

கொத்தமல்லி தழையை பால் விட்டு நன்றாக பசைப்போல் அரைத்து அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து முகத்தில் தடவி வர முகப்பொலிவுடன் இருக்கும் மேனி பொலிவாகும். கொத்தமல்லி தழையுடன் பாலாடைக்கட்டி சேர்த்து அதில் அரிசி மாவு தேவையான அளவு கலந்து நன்றாக அரைத்து ஒன்றுச்சேர்த்து பசையை முகத்தில் தடவி வர முகத்தில் உண்டாகும் கரும்புள்ளிகள், மங்கு, முகத்தில் உண்டாகும் சிறுசிறு துளைகள் ஆகியவை மறையும்.

coriander,egg yolk,tomato juice,lemon juice ,கொத்தமல்லி தழை, முட்டை வெண்கரு, தக்காளிச்சாறு, எலுமிச்சை பழச்சாறு

கொத்தமல்லி தழையுடன் தக்காளிச்சாறு, எலுமிச்சை பழச்சாறு, முல்தானிமட்டி பவுடர் இவைகளை ஒன்று சேர்த்து பசையாக்கி முகத்தில் அல்லது கை கால்களில் தேய்த்து 15 நிமிடம் கழித்து கழுவிக்கொள்ள முகம் மற்றும் தோல் பொலிவுடன் இருக்கும்.

கொத்தமல்லி தழையுடன் முட்டை வெண்கரு மற்றும் ஓட்ஸ்பவுடர் சேர்த்து பசையாக்கி முகத்தில் தடவி வர முகச்சுரசுரப்பு, முகத்தில் உண்டாகும் கரும்புள்ளிகள் மறையும்.

Tags :