Advertisement

நிரந்தர அழகை பெற உதவும் வெள்ளரிக்காய் பேஸ்ட்

By: Nagaraj Sun, 11 Sept 2022 00:01:16 AM

நிரந்தர அழகை பெற உதவும் வெள்ளரிக்காய் பேஸ்ட்

சென்னை: நிரந்தரமான அழகை பெறுவதற்கு வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி எப்படி அழகாவது என்று தெரிந்துகொள்வோம்.

வெள்ளரிக்காய் பேஸ்ட் செய்ய தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் -1
கற்றாழை ஜெல் – 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை- சிறிதளவு

செய்முறை: முதலில் வெள்ளரிக்காயை கழுவி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அடுத்து கற்றாழையை கழுவிட்டு தோல் நீக்கி உள்பகுதியில் இருக்கும் ஜெல்லை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

face beauty,cucumber,gel,face,paste ,முக அழகு, வெள்ளரிக்காய், ஜெல், முகம், விழுது

மிக்சி ஜாரை எடுத்து கொண்டு நறுக்கி வைத்த வெள்ளரிக்காய் மற்றும் கற்றாழை ஜெல் 2 தேக்கரண்டி, சிறிதளவு கொத்தமல்லி தலை சேர்த்து அரைத்து கொள்ளவும். தண்ணீர் ஊற்றாமல் பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொள்ளலாம்.

வடிகட்டி வைத்து அரைத்து வைத்த விழுதை வடிகட்டவும். வடிகட்டிய பின் வரும் ஜெல்லை மட்டும் எடுத்து வைத்து கொள்ளவும். வெள்ளரிக்காய் ஜெல்லை இரவு தூங்குவதற்கு முன் முகத்தில் தடவ வேண்டும். தினமும் இந்த பேஸ்ட்டை தடவுங்கள் முகம் அழகாக இருக்கும்.

இரவு முழுவதும் முகத்தை கழுவாமல் வைத்திருங்கள். காலை எழுந்தவுடன் முகத்தை கழுவுங்கள். உங்களுடைய முகம் மேக்கப் போட்ட மாதிரி மின்னும். மேல் கூறப்பட்டுள்ளது போல் தினமும் செய்து வந்தால் நீங்கள் மேக்கப் போடுவதற்கு நேரத்தையும், பணத்தையும் செலவு செய்ய வேண்டியதில்லை. நிரந்தரமான முக அழகை பெற முடியும்.

Tags :
|
|