Advertisement

முடி உதிர்தலை தடுக்க உதவும் கறிவேப்பிலை, வெங்காயம் துவையல்

By: Nagaraj Mon, 31 Oct 2022 10:46:43 PM

முடி உதிர்தலை தடுக்க உதவும் கறிவேப்பிலை, வெங்காயம் துவையல்

சென்னை; பெண்கள் ஒவ்வொரு முறை கண்ணாடியை பார்க்கும் போதும் அவர்களுக்கு கவலை தரக்கூடிய ஒரு விஷயம் முடி உதிர்தல்தான். பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி முடி உதிர்தல் ஒரு பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது.

தலைவாரும் போதெல்லாம் அப்படியே வேரோடு கொத்து கொத்தாக முடிகள் உதிர்கின்றன. தலை வாருவதற்கே பயமாக இருக்கிறது என்கிற கவலை பெண்களுக்கும், ஆண்களுக்கும் மத்தியில் ஒரு பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது. கவலை வேண்டாம். தலைமுடி செழித்து வளர, தலைமுடி உதிர்வதை தடுக்க சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக.


வாரத்திற்கு 3 நாட்கள் கறிவேப்பிலை, வெங்காய துவையல் செய்து சாப்பிட்டு வந்தீர்கள் என்றால், 2 வாரத்திலேயே முடி உதிர்தல் குறைந்து, முடி செழித்து வளர ஆரம்பிக்கும்.

தேவையான பொருட்கள் -
கருவேப்பிலை - ஒரு கட்டு
சின்ன வெங்காயம் - 4
நல்லெண்ணெய் - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 5
புளி - ஒரு எலுமிச்சை அளவு
தாளிக்க - கடுகு, உளுந்தம் பருப்பு

ghee,mustard,curry leaves,onion,wash ,நல்லெண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், துவையல்

செய்முறை: கறிவேப்பிலையை நன்றாக தண்ணீர் விட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்தை நன்றாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இதன் பின்னர், ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய்யை ஊற்றி, அதில் நறுக்கி வைத்த சின்ன வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

சின்ன வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதை ஒரு தனி பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதே எண்ணெய்யில், கறிவேப்பிலையை போட்டு வதக்குங்கள். மிதமான தீயில் கருகாமல் வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயமும், கறிவேப்பிலையும் ஆறியதும், ஒரு மிக்ஸியில் வதக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், புளி சேர்த்து லேசான தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர், ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, சிறிது கறிவேப்பிலை போட்டு தளித்து, அரைத்து வைத்த கலவையில் சேர்த்து விடுங்கள். சூப்பரான கறிவேப்பிலை, வெங்காய துவையல் ரெடி. இதை வாரம் இருமுறை சாப்பிடும் போது உங்கள் முடி உதிர்வது குறைந்து செழித்து வளர ஆரம்பிக்கும்.

Tags :
|
|