Advertisement

பொடுகை விரட்டும் வேப்பிலை... இப்படி பயன்படுத்திதான் பாருங்களேன்!

By: Monisha Fri, 18 Dec 2020 4:06:16 PM

பொடுகை விரட்டும் வேப்பிலை... இப்படி பயன்படுத்திதான் பாருங்களேன்!

தலை முடி தொடர்பான பிரச்சனைகளில் முக்கியமானது பொடுகு தொல்லை. பலர் பொடுக்கு பல மருத்துவ முறைகளை கையாண்டும் தீர்வு கிடைக்காமல் அவதி பட்டு வருகின்றனர். இந்த பதிவில் எல்லா இடங்களிலும் சாதாரணமாக கிடைக்க கூடிய வேப்பம் இலையை வைத்து பொடுகை எப்படி விரட்டுவது என்று பார்க்கலாம்.

வேப்பிலையை அரைத்து அல்லது வேப்பிலை பொடியில் எலுமிச்சை சாறு பிழிந்து மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதை தலையின் வேர்களில் படும்படி தடவி 30 நிமிடங்கள் காய விடுங்கள். பின் தலைக்குக் குளித்துவிடுங்கள். வாரம் இரண்டு முறை செய்யலாம்.

dandruff,neem leaf,scalp,natural,lemon ,பொடுகு,வேப்பிலை,தலை முடி,இயற்கை,எலுமிச்சை

வேப்பம் இலைகளை எடுத்து வந்து பானை ஒன்றில் போட்டு தண்ணீர் ஊற்றி மூடி கொதிக்க வையுங்கள். நன்றாக கொதித்ததும் இறக்கி வையுங்கள் மூடியை திறக்க வேண்டாம். நீங்கள் குளித்து முடித்தபின் தலையை வேப்பம் இலை அவித்த நீரில் நன்றாக கழுவுங்கள். உடலோடு சேர்த்து கழுவினால் கூட எந்த பிரச்சனையும் இல்லை.

நன்றாக தலையை வேப்பம் இலை அவித்த நீரில் கழுவி விட்டு துண்டு ஒன்றினால் தலையை கட்டிக் கொள்ளுங்கள். 1 மணி நேரத்தின் பின் துண்டை கழட்டி விடலாம். அடுத்த நாள் வரை தலை குளிக்க கூடாது. இப்படி இரண்டு நாள் செய்தாலே பொடுகு ஓடி விடும். அத்துடன் பேன், ஈறு போன்ற தொல்லைகளும் இருக்காது.

Tags :
|