Advertisement

உடல் சோர்வு, மன அழுத்தத்தை போக்கும் புட் மசாஜ்

By: Nagaraj Sat, 09 May 2020 10:28:20 AM

உடல் சோர்வு, மன அழுத்தத்தை போக்கும் புட் மசாஜ்

மனஅழுத்தம் என்பது ஆண்களை விட பெண்களுக்குதான் அதிகம். இதனால் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். இதற்கு சரியான தீர்வு, மன அழுத்தத்தை முற்றிலுமாக நீக்க உதவுவத ஃபுட் (பாதம்) மசாஜின் சிறப்பு. இந்த மசாஜின் ஆதாரமே கால்கள்தான்.

ஏனெனில், உடல் உறுப்புகளுக்கான நரம்பு மண்டலம், இரு கால் பாதங்களில்தான் அமைந்திருக்கிறது.

stone massage,women,refreshment,anxiety,stress ,ஸ்டோன் மசாஜ், பெண்கள், புத்துணர்ச்சி, கவலை நீங்கும், மனஅழுத்தம்

உடல் சோர்வை நீக்கும் புட் மசாஜ்

பெண்கள், கால்களை அழகாக வைத்துக்கொள்ள வேண்டுமென அதிகம் விரும்புவர். புட் மசாஜ் செய்யும் கால்கள், சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்போது மசாஜின் பயனை முழுமையாகப் பெறமுடியும். இந்த மசாஜ் முறை மிகவும் எளியது என்பதால், பெண்கள் இதைப் பெரிதும் விரும்புகின்றனர்.

உடல் சோர்வை நீக்கும் முதன்மையான மசாஜ் இது. ஆற்றிலிருந்து எடுத்து வரப்படும் கூழாங்கற்கள்தான் இந்த மசாஜுக்கு ஏற்றவை. இதற்கு, பெரும்பாலும் கறுப்பு நிற கற்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன.

மசாஜுக்கு ஏற்ப வட்டம், நீள் வட்டம், உருளை என கற்களின் வடிவம் மாறும். ஒவ்வொருமுறையும் அந்தக் கற்களை நீரில் போட்டு சூடுபடுத்தி, மசாஜுக்குப் பயன்படுத்துகின்றனர்.

stone massage,women,refreshment,anxiety,stress ,ஸ்டோன் மசாஜ், பெண்கள், புத்துணர்ச்சி, கவலை நீங்கும், மனஅழுத்தம்

கவலை மனநிலை மாறி புத்துணர்ச்சி கிட்டும்

ஆண்களைவிட பெண்களின் சருமம் மிகவும் மென்மையானது என்பதால், அவரவர்களின் தாங்கும் தன்மைக்கு ஏற்ப கற்களின் சூடு வித்தியாசப்படுகிறது. கற்களின் சூடு மெல்லிய அளவில் பரவுவதால், தோல்கள் ரிலாக்ஸாகின்றன.

இதனால் கவலையான மனநிலை முற்றிலுமாக மாறி, புத்துணர்ச்சி கிடைக்கிறது. நேரடியாக கற்களின் சூட்டைத் தாங்க முடியாதவர்களுக்கு, துணிகளைச்சுற்றி சூட்டை உடலுக்குள் செலுத்துவது ஏற்றதாகவும், ஆண்களைவிட பெண்களுக்கே இந்த முறை பொருத்தமானதாகவும் இருக்கிறது.

ஆண்களைவிட பெண்களின் சருமம் மிகவும் மென்மையானது என்பதால், அவரவர்களின் தாங்கும் தன்மைக்கு ஏற்ப ஸ்டோன் மசாஜுக்கு பயன்படுத்தும் கற்களின் சூடு வித்தியாசப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|