Advertisement

உடல் எடையை குறைத்து அழகாக இருக்கணுமா ...இதை சாப்பிடலாம்

By: vaithegi Wed, 17 Aug 2022 9:49:29 PM

உடல் எடையை குறைத்து அழகாக இருக்கணுமா ...இதை சாப்பிடலாம்

நுரையீரல் மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளை குணப்படுத்த கூடியது. உடலில் உள்ள நச்சுகளை நீக்கி சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. மேலும் செரிமானத்திற்கு உதவி நெஞ்செரிச்சல் போன்ற உபாதைகளை குணப்படுத்த கூடிய சீரகம் எடை குறைப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.சிறிது சீரகம், நல்ல மிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.


அதே சமயம் இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்.சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும். சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்தது கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும். மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.மேலும் சீரகத்தின் வேறுசில நன்மைகள் மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.

body weight ,உடல், எடை


மேலும் நுரையீரல் மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளை குணப்படுத்த கூடியது. உடலில் உள்ள நச்சுகளை நீக்கி சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. மேலும் செரிமானத்திற்கு உதவி நெஞ்செரிச்சல் போன்ற உபாதைகளை குணப்படுத்த கூடிய சீரகம் எடை குறைப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.உடை எடையை குறைக்க விரும்புவோருக்கு சீரக தண்ணீரை குடிப்பதை விட மிக சிறந்த எளிய வழி எதுவுமில்லை. சீரகம் உடலில் உள்ள தளர்வான கொழுப்பு சதைகளை கரைக்க வல்லது. எடை குறைய விரும்புவோர் தங்கள் உணவில் ஜீரகம் சேர்த்து கொள்வதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, ஜீரணத்திற்கு உதவுவதிலும், நமது உடல் அமைப்பிலிருந்து தேவையற்ற நச்சுகளை அகற்றுவதிலும் சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது.


இது மட்டும் இல்லாமல் உடலில் உள்ள செரிமான அமைப்பை பிரச்சனையில்லாமல், நச்சுகள் இன்றி சரியாக வைத்திருப்பது சரியான உடல் எடையை பராமரிப்பதற்கும் , தேவையற்ற கொழுப்பு இழப்புக்கும் முக்கியமான ஒன்றாகும். எனவே அன்றாடம் சீரகம் எடுத்து கொள்வதை வழக்கமாக்கினால் எடை அதிகரிப்பு தொடர்பான காரணிகளை நிர்வகிக்க அது உதவும். சீரகமானது உடலிலுள்ள கொழுப்புகளை விரைவாக கரைக்கும் தன்மை உடையது என்பதால், எடையை குறைக்க விரும்பும் ஒரு நபரின் முயற்சியை எளிதாக்கும்.சீரக நீரில் இலவங்கப்பட்டை தூள் சேர்த்து குடித்தால் எடை குறைப்பிற்கு இன்னும் அதிக உதவும். ஒரு தேக்கரண்டி சீரகத்தை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவே ஊறவைத்து விட்டு அடுத்த நாள் காலை முதல் இரவு வரை கூட பருகலாம். வெந்தயம் மற்றும் சீரகம் இரண்டையுமே தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து அதை வடிகட்டி குடித்து வந்தால் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சினைகள், செரிமான பிரச்சனை உள்ளிட்ட பல கோளாறுகளை சரி செய்யும்.


Tags :