Advertisement

தலைமுடி அடர்த்தியாக வளரணுமா.. அப்போ இதை செய்து பாருங்கள்

By: Nagaraj Fri, 14 Oct 2022 09:12:31 AM

தலைமுடி அடர்த்தியாக வளரணுமா.. அப்போ இதை செய்து பாருங்கள்

சென்னை: பெண்களுக்கு அடர்த்தியான கூந்தல்தான் பெரிய அளவில் விருப்பம். அதற்காக இயற்கை வழியில் தயாரான எண்ணெய் உங்களுக்கு பயன்படும்.

தேவையானப் பொருட்கள்:

தேங்காய் எண்ணெய் – 1லிட்டர்
விளக்கெண்ணெய் – கால் லிட்டர்
வசம்புப்பொடி – 5கிராம்
கரிசலாங்கன்னி பொடி – 5கிராம்
நெல்லிக்காய் பொடி – 5கிராம்
கருவேப்பிள்ளை பொடி – 5கிராம்
மருதாணி பொடி – 5கிராம்
அரோமா ஆயில் – இரண்டு சொட்டு(1லிட்டர் எண்ணெய்க்கு)
காட்டன் துணி

hair,coconut oil,aroma oil,wasambu powder,charcoal ,தலைமுடி, தேங்காய் எண்ணெய், அரோமா ஆயில், வசம்புப்பொடி, கரிசலாங்கண்ணி

செய்முறை: ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் மற்றும் கால் லிட்டர் விளக்கெண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இரண்டு ஆயில்களையும் ஒன்றாக சேர்க்கவும். பின்னர் வசம்புப்பொடி, கரிசலாங்கண்ணி பொடி, நெல்லிக்காய் பொடி, கருவேப்பிலை பொடி, மருதாணி பொடி, அரோமா ஆயில் லேசான காட்டன் துணியை எடுத்துக் கொள்ளவும்.

லேசான காட்டன் துணியில் பொடியை வைத்துக் கட்டி விடவும். ஒவ்வொரு பொடியையும் தனித்தனிக் காட்டன் துணியில் கட்டவும். லேசான காட்டன் துணியில் கட்டிய பொடியை எடுத்து ஆயிலில் போட்டு வைக்கவும். இதனை ஒருவாரம் கழித்து எடுத்து பயன்படுத்தவும். ஒருவாரம் கழித்து அரோமா ஆயிலை இரண்டு சொட்டு விடவும்.


ஆயில் தேய்க்கும் முறை: ஆயிலை மிதமாக சூடுபடுத்தி தலையில் தேய்க்கவும். தேய்த்த பின்பு பெரிய பற்களை உடைய சீப்பு வைத்து 15 நிமிடம் விடாமல் சீவவும். அரை மணி நேரத்திற்கு பின்பு தலையை அலசவும்.

குறிப்பு: ஆயிலை மிதமான சூட்டில் தான் பயன்படுத்த வேண்டும். இதனை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். இதில் கூறியுள்ள தேவையானப் பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அரோமா ஆயிலை பயன்படுத்தினால் எண்ணெய் நன்கு மணமாக இருக்கும்.

Tags :
|