Advertisement

பற்கள் பளிச்சென்று மின்ன வேண்டுமா... சில யோசனைகள்

By: Nagaraj Fri, 28 Oct 2022 5:59:33 PM

பற்கள் பளிச்சென்று மின்ன வேண்டுமா... சில யோசனைகள்

சென்னை: பற்களின் நிறம் மங்குவது, பற்கள் மஞ்சளாக மாறுவது வயதாகும் போது எதிர்கொள்ளும் பிரச்சனை தான். நம்முடைய பற்களில் உள்ள வெளிப்புற எனாமல் தேயும் போது மஞ்சள் நிற படிகங்கள் அதிகமாக தெரிய வாய்ப்பு உள்ளது.

இளவயதில் பற்கள் மஞ்சளாக பல காரணங்கள் சொல்லப்படுகிறது. குறிப்பாக காபி, டீ, வொயின் போன்ற பானங்களை அதிகமாக குடிக்கும் போது இந்த பிரச்சினை ஏற்படுகிறது.புகைபிடித்தல் பழக்கம், பல் ஆரோக்கியம் இல்லாமல் இருத்தல், பல் பிரச்சினைகள் இவற்றாலும் பற்களில் மஞ்சள் தன்மை ஏற்படுகிறது.

பற்களின் மஞ்சள் தன்மை போக்க 200 மில்லி தண்ணீரில் 2 டீஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை சேர்த்து மவுத்வாஷ் செய்து வாருங்கள். அனைத்து பற்களின் இடுக்குகள் வரை சென்று இவை படர வேண்டும். பிறகு வாய் கொப்பளிக்க வேண்டும்.

white,teeth,pearl,hint ,பற்கள், வெண்மை,மஞ்சள்,வயது

ஆரஞ்சு, வாழைப்பழங்கள், எலுமிச்சை தோலை பற்களில் மென்மையாக் தேய்த்தெடுப்பதன் மூலம் மஞ்சள் நிறம் குறைந்து பற்கள் வெண்மையாவதை பார்க்கலாம். தினமும் ஒரு டீஸ்பூன் எண்ணெயை வாயில் விட்டு நன்றாக கொப்புளித்து சில நிமிடங்கள் வரை வாயில் வைத்து பிறகு எண்ணெயை வெளியேற்றினால் பற்களின் மஞ்சள் கறை குறைந்து வெண்மையாக இருக்கும். ஒவ்வொரு முறை ஸ்நாக்ஸ் மற்றும் உணவுக்கு இடையில் வாய் கொப்புளித்து வருவதன் மூலம் கிருமிகள் தங்காமல் பாதுகாக்கலாம். பற்களை வெள்ளையாகவும் வைத்திருக்கலாம்.

கால்சியம் சத்து பற்களை வலிமையாக வைக்க உதவுகிறது. இது பற்கள் மற்றும் ஈறுகளை வலிமையாக்க உதவுகிறது. எனவே கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது பல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

Tags :
|
|
|