Advertisement

கால் பாதம் பளபளப்பாக இருக்க வேண்டுமா! இதோ உங்களுக்காக

By: Nagaraj Sun, 06 Sept 2020 1:49:26 PM

கால் பாதம் பளபளப்பாக இருக்க வேண்டுமா! இதோ உங்களுக்காக

கால் பாதம் சற்று கடினமாகவோ, அல்லது வெடிப்புகள் இல்லாமலோ, பளபளப்பாக இருக்க வேண்டும் என்று ஆசை உள்ளதா? அப்போ நீங்க கட்டாயம் இதை ட்ரை பண்ணுங்க. நிச்சயம் பலன் கிடைக்கும்.

தேவையானவை:

செண்பகப்பூ- 2
பாலாடை- சிறிதளவு
பால்- சிறிதளவு
வேப்ப எண்ணெய்- சிறிதளவு

செய்முறை: செண்பகப் பூவினை பாலாடை மற்றும் பாலுடன் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும். இதனை பாதத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவைத்து கழுவிக் கொள்ளவும்.

அடுத்து கழுவிய பாதத்தில் வேப்ப எண்ணெயினைத் தடவி, இரவில் ஊறவைத்து தூங்கவும். இவ்வாறு வாரத்தில் 2 முறை தொடர்ந்து செய்துவந்தால் பாதம் பளபளவென்று மாறிவிடும்.

Tags :
|