- வீடு›
- அழகு குறிப்புகள்›
- ஆரஞ்சு பழத்தோலை இனி தூக்கி எறியாதிங்க..!
ஆரஞ்சு பழத்தோலை இனி தூக்கி எறியாதிங்க..!
By: Monisha Wed, 27 May 2020 1:27:10 PM
ஆரஞ்சு பழத்தோலை இனி தூக்கி எரியாமல் வெயிலில் நன்றாக காயவைத்து, பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இந்த ஆரஞ்சு பழத்தோல் பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளவும், பின்பு பாதாம் பருப்பையும் நன்றாக அரைத்து பொடி செய்து ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளவும்.
இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். பின்பு அதனுடன் இரண்டு ஸ்பூன் பசும் பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி, நன்றாக மசாஜ் செய்து 10 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை முகத்தில் இந்த கலவையை வைத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ, சருமம் பொலிவுடனும், ஆரோக்கியமாகவும், வெண்மையாவும் காணப்படும்.
ஆரஞ்சு பழத்தோலை காயவைத்து பொடி செய்து வைத்து கொள்ளவும். ஒரு பவுலில் இரண்டு ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடியை எடுத்துக்கொள்ளவும், அதனுடன் ஒரு ஸ்பூன் பசும்பால் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.
இந்த முறையை வாரத்தில் மூன்று முறை செய்து வந்தால், சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், எண்ணெய் பசை கொண்ட சருமம், மேடுபள்ளம் கொண்ட சருமம் மற்றும் பருக்கள் ஆகிய பிரச்சனைகளை சரி செய்யும். அதுமட்டும் இன்றி சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். இதனால் சருமம் எப்பொழுதும் பொலிவுடன் காணப்படும்.