- வீடு›
- அழகு குறிப்புகள்›
- வறண்டு போன தலைமுடியா... சரி செய்ய இயற்கை முறை ஹேர்பேக்
வறண்டு போன தலைமுடியா... சரி செய்ய இயற்கை முறை ஹேர்பேக்
By: Nagaraj Mon, 13 June 2022 11:11:56 PM
சென்னை: தலைமுடி வறண்டு போய் உடைந்து விழும் பிரச்சினை அனைவருக்கும் உள்ளது. இதை சரிசெய்யும் ஹேர்பேக்கினை எப்படித் தயார் செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள். இயற்கை முறையிலான இந்த ஹேர்பேக் உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்கும்
தேவையானவை:
பாசிப் பயறு- 4 ஸ்பூன்
தேங்காய்- ½ மூடி
செய்முறை: பாசிப்பயறினை நீரில் போட்டு நன்கு ஊறவைக்கவும். அடுத்து தேங்காயினை அரைத்துப் பால் பிழிந்து கொள்ளவும்.
தேங்காய்ப் பாலுடன் பாசிப் பயறு சேர்த்து மிக்சியில் போட்டு மைய அரைத்தால் ஹேர்பேக் ரெடி.
இந்த ஹேர்பேக்கினைத் தலைமுடியில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டு அலசினால் தலைமுடி வறண்டு உடைந்து விழும் பிரச்சினை சரியாகும்.
Tags :
hair |
dryness |
breakage |
algae |