Advertisement

முடி கருமையாகவும் ,நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர இதை ட்ரை பண்ணுங்க

By: vaithegi Wed, 11 Jan 2023 10:44:29 AM

முடி கருமையாகவும் ,நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர இதை ட்ரை பண்ணுங்க

முடி கருமையாகவும் ,நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர இதை ட்ரை பண்ணுங்க

இயற்கையான தேங்காய் எண்ணெய் மற்றும் இயற்கையாக தயாரித்த சீயக்காய் போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்வதை தடுத்து முடி நீளமாக வளர்வதை பார்க்கமுடியும். கூந்தல் உறுதியாகவும் நீளமாகவும் இருப்பதற்கு வைட்டமின் சத்துகள் மிகவும் முக்கியமானது. அதுமட்டுமல்லாது இரும்புச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். இவை அனைத்தும் முடி உதிர்வதை தடுத்து முடியை ஆரோக்கியமாகவும், அடர்த்தியாக வளரவும் வழி வகை செய்யும்.

முடி உதிர்வுக்கு பல வகை காரணங்கள் இருந்தாலும், இரும்பு சத்து குறைபாடும் ஒரு முக்கிய காரணமாகும். முடி கருமையாகவும் மற்றும் நீளமாகவும் வளர இரும்புசத்து இன்றியமையாதது. ஒரு மனிதருக்கு 90,000 முதல் 1,50,000 வரை தலைமுடிகள் இருக்குமாம். ஒவ்வொரு முடியும் சராசரியாக 1௦௦௦ நாட்கள் வரை மட்டும் வளரும் அதன் பின் உதிர்ந்து விடும். முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர கீழ்க்காணும் உணவு வகைகளை உங்களது உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

hair,iron ,முடி ,இரும்புசத்து

முட்டையில் புரதம் மற்றும் பயோட்டின் அதிகம் நிறைந்துள்ளது. கூந்தலுக்கு புரதச்சத்து மிகவும் அவசியமான ஒன்று. இது முடி ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் முக்கியமானது. இந்த ஊட்டச்சத்துக்களில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.

ஆளி விதைகள் மற்றும் சூரியகாந்தி விதைகள் போன்ற விதைகளில் இரும்பு, வைட்டமின் ஈ, பி, கால்சியம், துத்தநாகம், புரதம், செலினியம், பொட்டாசியம், பயோட்டின், தாமிரம், மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட முடி வளர்ச்சிக்கான ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. தோல் மற்றும் முடிக்கு ஆளி விதை நன்மைகள் ஏராளம்.

Tags :
|