Advertisement

பாதங்களை சரியாக, அழகாக பராமரிக்க சில யோசனைகள்

By: Nagaraj Mon, 11 May 2020 10:35:14 PM

பாதங்களை சரியாக, அழகாக பராமரிக்க சில யோசனைகள்

உங்கள் பாதங்களை சரியாக பராமரிக்க வேண்டும். அதற்காக சில யோசனைகள் உங்களுக்காக.

படுக்கைக்கு செல்லும் முன்போ அல்லது காலை படுக்கையில் இருந்து எழுந்ததும் சிறிது நேரம் உங்கள் பாதங்களை மிதமான வெந்நீரில் கழுவி உங்களின் பாதத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துங்கள்.

மருதாணி இலை விழுது

பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் வீட்டில் மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும். உருளைக்கிழங்கை காய வைத்து அதனை மாவு போன்று அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வர வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம் மிளிரும்.

நீங்கள் ஷு அணிபவரா, அப்படியானால் சாயம் கலந்த செயற்கை நூலினால் செய்யப்பட்ட கால் உறைகளைத் தவிர்த்து, காட்டன் கால் உறைகளை உபயோகியுங்கள்.

paws,hot water,footwear,henna ,பாதங்கள், வெந்நீர், பாதவெடிப்புகள், மருதாணி

எலுமிச்சைத் தோல்

இளஞ்சூடான நீரில் பாதங்களை சிறிது நேரம் வைத்திருந்து, பீர்க்கங்காய் நார் கொண்டு பாதங்களை நன்றாகத் தேய்த்துக் குளிப்பதால் பாதங்கள் மிருதுவாக மாறும். பாதங்களை எலுமிச்சைப் பழத்தோலால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நன்றாகத் தேய்த்து வர பாத வெடிப்பு குணமாகும்.

மருதாணியை அரைத்து பாத வெடிப்பு அதிமாக இருக்கும் இடத்தில் பூசி வந்தால் பாதவெடிப்புகள் குணமாகும். நல்ல காற்றோட்டம் உள்ள செருப்புக்களையும், ஷுக்களையும் அணியுங்கள், இது உங்களின் கால்களில் புண்களை ஏற்படுத்தாமல் தவிர்க்க ஒரு சிறந்த வழி முறையாகும்.

Tags :
|