Advertisement

முட்டையின் வெள்ளைக்கருவால் சருமத்தின் எண்ணெய் பிசுபிசுப்பை போக்கலாம்

By: Nagaraj Mon, 31 Oct 2022 7:32:35 PM

முட்டையின் வெள்ளைக்கருவால் சருமத்தின் எண்ணெய் பிசுபிசுப்பை போக்கலாம்

சென்னை: சரும சுருக்கம், எண்ணெய் பிசுபிசுப்புத்தன்மை, முகப்பரு போன்ற பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது முட்டையின் ெள்ளைக்கரு.

சரும பொலிவை தக்க வைத்துக்கொள்ளவும் துணை புரியும். சருமம் எண்ணெய் பிசுபிசுப்பு தன்மை கொண்டிருந்தால் முகப்பரு, கரும்புள்ளி பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும். முட்டையின் வெள்ளைக்கருவிற்கு எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் ஆற்றல் இருக்கிறது.

முதலில் வெது வெதுப்பான நீரில் முகத்தை நன்கு கழுவ வேண்டும். அதன் பிறகு முட்டையின் வெள்ளைக்கருவை தடவி மசாஜ் செய்ய வேண்டும். நன்கு உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். பின்பு மென்மையான துண்டு கொண்டு முகத்தை துடைக்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்துவந்தால் முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்புத் தன்மை நீங்கிவிடும்.

damage,skin,spots,lemon juice,egg white ,பாதிப்பு, சருமம், புள்ளிகள்,எலுமிச்சை சாறு, முட்டை வெள்ளைக்கரு

சிலருடைய முகத்தில் தேவையற்ற ரோமங்கள் முளைத்து சரும அழகை குலைக்கும். அதனை அவ்வப்போது அப்புறப்படுத்துவது சிரமமாக இருக்கும். அத்தகைய சிரமத்திற்கு ஆளாகுபவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவை பயன்படுத்தலாம்.

முட்டையின் வெள்ளைக்கருவை நெற்றி, கன்னம், உதட்டின் மேல் பகுதி என முகம் முழுவதும் நன்றாக ‘ப்ரஷ்’ மூலம் தடவ வேண்டும். முட்டைக்கரு நன்கு உலர்ந்ததும் முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து செய்துவந்தால் தேவையற்ற ரோமங்கள் முளைக்காது.

சிலருடைய சருமத்தில் கருப்பு திட்டு போன்ற புள்ளிகள் தென்படும். அதனால் சரும அழகு பாதிப்புக்குள்ளாகும். முட்டையின் வெள்ளைக்கருவுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவ வேண்டும். பின்னர் கால் மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். வாரம் இருமுறை இவ்வாறு செய்துவந்தால் அந்த பாதிப்பு நீங்கி விடும்.

Tags :
|
|
|