Advertisement

சருமத்தை பளபளப்பாக மின்ன செய்யும் ஃபேஸ் ஸ்க்ரப்!

By: Monisha Fri, 13 Nov 2020 11:59:22 AM

சருமத்தை பளபளப்பாக மின்ன செய்யும் ஃபேஸ் ஸ்க்ரப்!

பெண்களின் முகத்தின் அழகுக்கு அழகு சேர்க்கும் ஒரு அற்புத தயாரிப்பு ஃபேஸ் ஸ்க்ரப். இது பெண்களின் சருமத்தை அழகாக்கி பளபளவென மின்ன செய்கிறது. இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றுவதற்கு முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. உங்கள் சரும வகைக்கு ஏற்றவாறு ஸ்க்ரப் தேர்ந்தெடுப்பது நல்லது.

எண்ணெய் சருமம்
எண்ணெய் சருமத்தைப் பொறுத்தவரை அரிசி மாவை பயன்படுத்தலாம். இது அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும். கூடவே பாதாம், வால்நட் போன்ற அத்தியாவசிய பொருட்கள் நல்ல செயல்திறனுக்காக சேர்க்கப்படுகின்றன. இந்த பொருட்கள் சருமத்தை குறைந்த எண்ணைத்தன்மை மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது. ஜெல் அடிப்படையிலான ஸ்க்ரப்களைத் தேர்வுசெய்தால் அவை உங்கள் சருமத்தை மேலும் எண்ணெய் மிக்கதாக மாற்றுவதில்லை.

skin,face,beauty,face scrub,women ,சருமம்,முகம்,அழகு,ஃபேஸ் ஸ்க்ரப்,பெண்கள்

வறண்ட சருமம்
இந்த ஸ்க்ரப்பில் சருமத்தை வறட்சியில்லாமல் உயிர்ப்புடன் வைத்திருக்க சர்க்கரை தன்மை கொண்ட நீர் உபயோகமாக இருக்கும். மேலும் இது ஒரு கிரீம் போல இருக்க வேண்டும், இது வறண்ட சருமத்திற்கு ஈரப்பத தன்மையை கொடுக்கும். இந்த ஃபேஸ் ஸ்க்ரப் பாக்டீரியாவைக் கொன்று, சருமத்தை விட்டு வெளியேற்றி அதை மென்மையாக்குகிறது. தோல் முன்பை விட அதிகமாக ஒளிரத் தொடங்குகிறது. மேலும், இந்த ஸ்க்ரப் நீங்கள் பயன்படுத்திய பிறகு உங்கள் சருமத்தை ஈரப்பதம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

skin,face,beauty,face scrub,women ,சருமம்,முகம்,அழகு,ஃபேஸ் ஸ்க்ரப்,பெண்கள்

முகப்பரு சருமம்
பலருக்கும் முகத்தில் இருக்க கூடிய ஒரு முக்கிய பிரச்னை முகப்பரு. முகத்தில் வரக்கூடிய முகப்பருவை குணமாகும் வகையில் வரக்கூடிய இந்த வகை ஃபேஸ் ஸ்க்ரப்களில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவை முகப்பருவுக்கு சிகிச்சையளிப்பதற்கான முக்கியமான பொருட்களாக உள்ளன.

இந்த ஸ்க்ரப்பை நீங்கள் முகத்துக்கு பயன்படுத்தும் பொழுது மெதுவாகப் பயன்படுத்துங்கள் உங்கள் முகப்பரு உடைந்து புண்ணாக்கலாம். பேக்கிங் சோடா மற்றும் வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவும் போது முகப்பருவை விரைவில் குணமாகும். அதுமட்டுமல்லாமல் இந்த ஸ்க்ரப்பின் பயன்பாடு உங்களுடைய சருமத்தை மென்மையாகவும், முகப்பரு இல்லாததாகவும் மாற்றும்.

சாதாரண சருமம்
ஃபேஸ் ஸ்க்ரப் சாதாரண முக சருமம் உள்ளவர்களுக்கு பயன்படுத்த மென்மையானது. இது உங்கள் சருமத்தை சேதப்படுத்தாது. இது சருமத்தை அழகாகவும் மென்மையாகவும் மாற்றுகிறது.

Tags :
|
|
|