Advertisement

தலைமுடி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கொடுக்கும் வெந்தயம்

By: Nagaraj Sun, 10 July 2022 3:18:29 PM

தலைமுடி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கொடுக்கும் வெந்தயம்

சென்னை: தலைமுடி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கொடுப்பதில் வெந்தயத்திற்கு முதலிடம் உண்டு. அந்த காலத்திலேயே சீயக்காய் அரைப்பதாக இருந்தால் கூட அதில் வெந்தயத்தை சேர்க்காமல் சீயக்காய் அரைக்க மாட்டார்கள். தலைமுடி உதிர்வை சரி செய்து, முடியை அடர்த்தியாக வளர செய்ய வெந்தயம் என்ற ஒரு பொருள் மிக மிக அவசியம் தேவை.

வெந்தயத்தின் முழு பலனும் நம்முடைய தலைக்கு கிடைக்க, வெந்தயத்தை எந்த தண்ணீரில் ஊற வைத்து எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். அரிசி வடித்த கஞ்சி பெரும்பாலும் நாம் எல்லோர் வீட்டிலும் இருக்கும் அல்லவா. அந்த கஞ்சியில் வெந்தயத்தை 8 மணி நேரம் ஊற வையுங்கள். ஊறிய இந்த வெந்தயத்தை கஞ்சியோடு சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு மொழு மொழுன்னு அரைக்க வேண்டும்.

ஊறிய வெந்தயமும் கஞ்சியும் சேர்த்து அறைத்தால் இதுவே நேச்சுரல் ஷாம்பு போல புசுபுசுவென பொங்கி வந்திருக்கும். இந்த ஹேர் பேகோடு பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய, தலைக்கு ஊட்டச்சத்து கொடுக்கக்கூடிய ஒரு இலையை சேர்க்க வேண்டும். கருவேப்பிலை, முருங்கை கீரை, கொய்யா இலை இதில் உங்களுக்கு எது சுலபமாக கிடைக்கிறதோ அதையும் சேர்த்து விழுது போல அரைத்துக் கொள்ளுங்கள்.

நமக்கு தேவையான பேக் தயார். இந்த மூன்று இலைகளில் ஏதாவது ஒரு இலையை தேர்ந்தெடுத்து ஒரு முறைக்கு பயன்படுத்துங்கள். மீண்டும் வெந்தயத்தில் ஹார் பேக் போடும்போது வேறு ஒரு இலையை கூட மாற்றி மாற்றி போடலாம்.

ஆனால் எல்லா இலைகளையும் ஒன்றாக சேர்த்து ஒரே முறையில் போட்டு அரைக்க வேண்டாம். இந்த பேக்கை தலைக்கு போடுவதற்கு முன்பு தலையில் தேங்காய் எண்ணெய் வைத்திருக்க வேண்டும். அப்படி தலைக்கு தேங்காய் எண்ணெய் வைக்கவில்லை என்றால் இந்த பேக்கில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து தலையில் நன்றாக அப்ளை செய்து கொள்ளுங்கள். தலைமுடியை சிறு சிறு பாகங்களாக பிரித்து வேர்க்கால்களில் படும்படி முதலில் இந்த ஹேர் பேக்கை போட்டு விடுங்கள்.

fenugreek,coconut,hair,problem,solution,effects do not occur ,வெந்தயம், தேங்காய், தலைமுடி, பிரச்னை, தீர்வு, விளைவுகள் ஏற்படாது

அதன் பின்பு முடியின் நுனி வரை இந்த பேக்கை போட்டு, அப்படியே 15 நிமிடங்கள் தலையில் ஊற வையுங்கள். அதன் பின்பு ஷாம்பு அல்லது சீகைக்காய் போட்டு தலையை அலசி கொள்ளலாம். வாரத்தில் ஒரு நாள் இந்த பேக்கை போட்டு வந்தால் கூட போதும். உங்களுடைய தலைமுடி பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறைய தொடங்கும்.

இந்த பேக்கில் இன்னொரு பெனிஃபிட்டும் உண்டு. கருவேப்பிலை, கொய்யா இலை முருங்கை கீரை இதில் எந்த இலையை சேர்த்தாலும் உங்களுடைய தலைமுடி ஸ்ட்ராங்காக வளர்வதோடு கருமையாக வளரும். இளநரையை தள்ளிப் போடவும் இந்த பேக் பயன் உள்ளதாக அமையும். வெந்தயத்தோடு குறிப்பிட்ட இந்த பொருட்களை தான் சேர்க்க வேண்டும் என்று அவசியம் கிடையாது.

உங்களுடைய வீட்டில் எந்த பொருள் தலைமுடி வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கின்றதோ, அந்த பொருட்களை வெந்தயத்தோடு சேர்த்து அரைத்து போடலாம். உதாரணத்திற்கு செம்பருத்திப் பூ, நெல்லிக்காய், தேங்காய், இப்படிப்பட்ட பொருட்களை சேர்க்கலாம். தலையில் அரிப்பு கொப்பளங்கள் இருக்கும் பட்சத்தில் வேப்ப இலை, துளசி இலைகளை சேர்த்து வெந்தயத்தோடு அரைத்துப் போட்டால் தலையில் இருக்கக்கூடிய இன்பெக்சன் குறையும். இப்படி பேக்கில் சில மாற்றங்களை நாமே செய்து கூட பயன்படுத்தலாம். அதன் மூலம் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது.

Tags :
|