Advertisement

முடி உதிர்வுக்கு நல்ல தீர்வை அளிக்கும் வெந்தய மாஸ்க்

By: Nagaraj Sun, 05 Nov 2023 12:55:37 PM

முடி உதிர்வுக்கு நல்ல தீர்வை அளிக்கும் வெந்தய மாஸ்க்

சென்னை: கூந்தலுக்கு வெந்தய மாஸ்க்கை பயன்படுத்தி நீங்கள் மிக சுலபமாக முடி கொட்டுவது, முடி உதிர்வது, பொடுகு, உச்சந்தலை அரிப்பு போன்ற பல்வேறு முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து சுலபமாக விடுபடலாம்.

முதல் நாள் இரவு தண்ணீரில் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். அதிகாலையில் தண்ணீரை வடித்து விட்டு வெந்தயத்தை பசை போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்தபின் அவை இரண்டையும் நன்கு கலக்க வேண்டும். இப்பொழுது வெந்தய பசையை உச்சந்த தலையில் அழுத்தி தடவ வேண்டும்.

hair loss,massage,fenugreek,hair,beauty,remedy ,முடி உதிர்வு, மசாஜ், வெந்தயம், கூந்தல், அழகு, தீர்வு

தலை முழுவதும் தடவிய பிறகு, சிறிது நேரத்திற்கு நன்கு அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு, வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்க வேண்டும்.

இந்த முறையை மாறி மாறி பின்பற்றி வர உங்களின் முடி உதிரும் பிரச்சனை தீர்ந்து உங்களின் கூந்தல் மிகவும் அழகாக மாறி விடும்.

Tags :
|
|