Advertisement

சருமத்திற்கு அழகு சேர்க்கும் ஆவாரம் பூ!

By: Monisha Wed, 09 Sept 2020 2:53:59 PM

சருமத்திற்கு அழகு சேர்க்கும் ஆவாரம் பூ!

பெண்களுக்கு முகத்தில் இருக்கும் தேவையில்லாத முடிகளை அழிக்க மற்றும் சருமத்திற்கு அழகு சேர்க்க ஆவாரம் பூ அதிக அளவில் உதவி புரிகின்றது. மேலும் இது முடி உதிர்வு பிரச்சனையை தடுக்கவும் மிகச்சிறந்த அளவில் உதவுகிறது.

ஆவாரம்பூவுடன் வெள்ளரி விதை, கசகசா, பால் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இவற்றை உடலிலும் முகத்திலும் தேய்த்துக் குளிக்கலாம். வாரத்துக்கு இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் உடல் வறட்சி நீங்கிவிடும், நிறம் பளிச்சென்று இருக்கும்.

பெண்களுக்கு முகத்தில் இருக்கும் தேவையில்லாத முடிகளை அழிக்க... பூலான் கிழங்கு, கோரைக்கிழங்கு, உலர்ந்த ஆவாரம் பூ ஆகிய மூன்றையும் பசை போல அரைத்துக்கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து உங்கள் முகத்திற்கு பூசி வந்தால் முகம் பளிச்சென்று மின்ன ஆரம்பித்துவிடும்.

skin,beauty,hair loss,women,body dryness ,சருமம்,அழகு,முடி உதிர்வு,பெண்கள்,உடல் வறட்சி

முடி கொட்டுவதை தடுக்க...செம்பருத்தி, தேங்காய்ப் பால் மற்றும் ஆவாரம்பூ ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இதை வாரத்துக்கு மூன்று முறை தேய்த்து குளித்து வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும். கூந்தலும் நன்கு வளர்ச்சி அடையும்.

வடிகட்டிய ஆவாரம் பூவின் தண்ணீரை வைத்து உங்கள் கூந்தலை அலசலாம். முகத்தையும் கழுவலாம், இதை தொடர்ந்து செய்தால் முடி சுத்தமாவதுமட்டுமில்லாமல், முகமும் பளிச்சென்று இருக்கும். உடலின் நிறம் அதிகரிக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

ஆவாரம் பூவின் சாற்றை சுண்டக் காய்ச்சி, அதனுடன் தேங்காய் எண்ணெயை சேர்த்து தினமும் முடிக்கு தடவி வரலாம். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி நன்கு வளருவதுடன் முடி கொட்டுவதும் நின்று விடும்.

Tags :
|
|
|