Advertisement

உங்கள் தலைமுடிக்கு தகுந்தவாறு என்ன ஹேர்ஸ்டைல் செய்யலாம்... தெரிந்து கொள்ளுங்கள்!!!

By: Nagaraj Sat, 09 May 2020 10:27:43 AM

உங்கள் தலைமுடிக்கு தகுந்தவாறு என்ன ஹேர்ஸ்டைல் செய்யலாம்... தெரிந்து கொள்ளுங்கள்!!!

உங்களுக்கு குட்டையான தலைமுடி இருக்கிறதா? திருமணம் நெருங்கி வருவதால், எந்த ஹேர்ஸ்டைலை பின்பற்றுவது என்பதைப் பற்றி கவலைப்படுகிறீர்களா? இனி வேண்டாம் கவலை...!

உங்கள் தலைமுடி, கழுத்தின் பின்பகுதி வரை நீளமாக இருக்கிறதா? உங்கள் தலைமுடியை முழுமையாக பின்னோக்கி வாரி விடுங்கள். முன்புறம், ஒரு பிரிவை எடுத்து, இன்னும் கொஞ்சம் பின்புறமிருந்து முன்னோக்கி வாரி விட்டு, பின் செய்து கொள்ளுங்கள். சிறிய கொண்டை. கழுத்துப் பகுதியில், ஒரு கர்லிங் அயர்னை எடுத்து, கர்ல்களை உருவாக்கிக் கொள்ளவும்.

தலைமுடி இறுக்கமாக, கலையாமல் இருக்க, ஸ்பிரே செய்து கொள்ளவும். தலைமுடியை பின் செய்து, சிறிய ஹேர்பின்களை செருகி, தலைமுடி கிடைமட்டமாக கலைந்த கொண்டையைப் போல தோன்ற வைக்கலாம். மேலே ஒரு அலங்காரமான தலைமுடி ஆக்சஸரியை வைத்து, ஹேர்பின்களை மறைத்துவிட்டால் இந்த ஹேர்ஸ்டைல் அழகாகத் தோற்றமளிக்கும்.

hair,make-up,haircut,hairstyle,shoulder length hair ,தலைமுடி, அலங்காரம், நெத்திச்சுட்டி, ஹேர்ஸ்டைல், தோள்பட்டை நீள தலைமுடி

தாழ்வான கொண்டை

உங்கள் தலைமுடி தோள்பட்டை அளவு நீளமாக உள்ளதா? அப்போது நீங்கள் தாழ்வான கொண்டையை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். “அதனுடன் உச்சியில் கொஞ்சம் தலைமுடியை அழகாக சீவி விட்டுக் கொண்டால், உங்களுக்கு ஒரு பாரம்பரிய தோற்றம் கிடைத்து விடும்,” தவானின் கருத்துப்படி, “தளர்வாக கட்டிய கொண்டைகள், குட்டை தலைமுடியில் அழகான தோற்றத்தை எளிதாக உருவாக்கி விடும். இதுவே, குட்டையான தலைமுடிக்கு ஏற்ற சிறந்த திருமண ஹேர்ஸ்டைல்களில் ஒன்றாகும்.

ட்ரெஸ் (சுருட்டை முடிகள்)

தோள்பட்டை அளவு நீளமுடைய தலைமுடி இருப்பவர்களுக்கு, கொண்டை அல்லது பின்னல்களை உருவாக்கி கொள்ள, ஹேர் எக்ஸ்டன்ஷன்களை (சவுரி) பயன்படுத்தலாம். அதை விடவும் தலைமுடி குட்டையாக இருந்தால் கழுத்துப்பகுதிக்கு மேலே ஒரு செயற்கை கொண்டையை அணிந்து கொள்ள முடியும். இதனால் முன்புறம் பின்னிய தலைமுடியும், பின்னல் கொண்டையும் திருமணத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தக் கூடியவை.

hair,make-up,haircut,hairstyle,shoulder length hair ,தலைமுடி, அலங்காரம், நெத்திச்சுட்டி, ஹேர்ஸ்டைல், தோள்பட்டை நீள தலைமுடி

திருமணத்திற்கு முந்தைய ஸ்டைல்கள்

தோள்பட்டை நீள தலைமுடிகளுக்கு அழகான பாதியளவு ஹேர்ஸ்டைலே கச்சிதமாக இருக்கும். உங்கள் தலைமுடியை பின்புறம் பின்னி, அதில் அழகான பூக்களைச் சேர்த்து கொள்ளவும்.

மினிமலிஸ்டிக் எத்னிக் தோற்றத்திற்கு, ஒரு சாதாரண நெத்திச்சுட்டி அழகான தோற்றத்தைக் கூட்டும். இந்த ஹேர்ஸ்டைல்களுடன் உங்களுடைய எத்னிக் லெஹங்கா சோலி, புடவை அல்லது அனார்கலி ஆகியவற்றைச் சேர்க்கும்போது, பாரம்பரிய தோற்றத்தைப் பெறுவீர்கள்.

Tags :
|