Advertisement

மனதை கவரும் அழகிய சிவப்பு உதடுகள் பெற!

By: Monisha Sat, 12 Dec 2020 09:14:31 AM

மனதை கவரும் அழகிய சிவப்பு உதடுகள் பெற!

சிவப்பான உதடுகள் யாருக்குத்தான் புடிக்காது? உங்கள் உதடு கறுத்துப் போய் காணப்படுகிறதா? கவலைப்பட வேண்டாம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள எளிய இயற்கை குறிப்புகள் உங்கள் உதடுகளுக்கு நல்ல நிறத்தை கொடுக்கும்.

இரவு தூங்கும் முன் வெண்ணெய்யை உதட்டில் தடவி கொள்ளவும். பின்னர் காலை பல் துலக்கும் ப்ரஷ் வைத்து நன்றாக உதடுகளை தேய்க்கவும். தினமும் தொடர்ந்து செய்து வந்தால் கண்டிப்பாக 3 நாள்களில் மாற்றம் தெரியும்.

வெள்ளரிக்காயை வட்டவடிவில் மெல்லிய துண்டாக வெட்டி கொள்ளவும், பின் வெள்ளரி துண்டை நன்றாக உதட்டில் தேய்க்கவும். பின்னர் ஈரப்பதத்தை தக்கவைக்க தேன் தடவி கொள்ளவும். இவ்வாறு செய்வதினால் உதடு கருப்பாவதை தடுக்கபடுவதோடு உதடு சிவப்பாக மாறும்.

lips,beauty,natural,butter,glycerin ,உதடுகள்,அழகு,இயற்கை,வெண்ணெய்,க்ளிசரின்

கறுத்துப் போன உதடுகளுக்கு க்ளிசரினை தினமும் தடவினால் கறுப்பு நீங்கி நல்ல நிறம் கிடைக்கும். பன்னீர் ரோஜாவின் சாறு அல்லது பன்னீரும் கூட நல்ல நிறம் கொடுக்கும். ஆரஞ்சுப் பழச்சாறு அல்லது மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் அழகாகும்.

புதினா இலைகளை அரைத்து உதடுகளில் தடவினால் கிருமிகள் அழிந்துவிடும். கற்றாழை உதடுகளில் தடவும் போது கருமை மறைந்து சிவப்பழகு பெறும். கொத்தமல்லி இலைகளின் சாற்றை உதடுகளில் தடவினால் கருமை மறையும்.

பீட்ரூட் உதடுகளில் உள்ள கருமை விரைவில் மறைய நன்கு உதவி புரிகிறது. பீட்ரூட்டை உதட்டில் தடவி வர விரைவில் மாற்றத்தை காணலாம். ஜாதிக்காயை அரைத்து உதடுகளில் தடவினால் கருமை மறைந்து சிவப்பழகு கிடைக்கும்.

Tags :
|
|
|