Advertisement

இயற்கையான வழியில் முகத்தில் உள்ள கருமையைப் போக்க..!

By: Monisha Thu, 21 May 2020 10:44:39 AM

இயற்கையான வழியில் முகத்தில் உள்ள கருமையைப் போக்க..!

எலுமிச்சை ஓரு சிறப்பான ப்ளீச்சிங் தன்மை வாய்ந்த பொருள். அந்த எலுமிச்சையின் சாற்றில் சிறிது உப்பு சேர்த்து கலந்து, குளிக்கும் போது இந்த கலவையைக் கொண்டு சருமத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள கருமைகள் அகலும்.

பேக்கிங் சோடாவை ரோஸ் வாட்டரில் கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இது முகத்தில் உள்ள கருமையைப் போக்கு உதவும்

lemon,natural scrubber,cucumber,cactus gel ,எலுமிச்சை,முகத்தில் உள்ள கருமையைப் போக்க,நேச்சுரல் ஸ்கரப்பர்,வெள்ளரிக்காய்,கற்றாழை ஜெல்

நேச்சுரல் ஸ்கரப்பர் செய்வதற்கு சிறிது ஓட்ஸ் உடன், பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். பின் முகத்தைக் கழுவிய பிறகு, வைட்டமின் ஈ ஆயிலை முகத்தில் தடவி மசாஜ் செய்து விட வேண்டும்.

வெள்ளரிக்காய் கூட சரும கருமையை நீக்க உதவும். அதற்கு வெள்ளரிக்காயை பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் கருமை மட்டுமின்றி, கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவையும் நீங்கும்.

lemon,natural scrubber,cucumber,cactus gel ,எலுமிச்சை,முகத்தில் உள்ள கருமையைப் போக்க,நேச்சுரல் ஸ்கரப்பர்,வெள்ளரிக்காய்,கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லை சருமத்தில் பயன்படுத்தினால், சருமத்தில் ஏதேனும் தொற்றுகள் இருந்தால் நீங்குவதோடு, சருமமும் ஈரப்பசையுடன் இருக்கும். அதற்கு கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

Tags :
|