Advertisement

முடி உதிர்வு பிரச்னைக்கு தீர்வை அளிக்கிறது நெய்

By: Nagaraj Mon, 26 June 2023 11:50:08 PM

முடி உதிர்வு பிரச்னைக்கு தீர்வை அளிக்கிறது நெய்

சென்னை: இன்றைய காலக்கட்டத்தில் உள்ளவர்களுக்கும் முடி உதிர்வு என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. உணவு மாற்றம், ஆரோக்கியமற்ற உணவு, நேரத்திற்கு சாப்பிடாதது போன்றவற்றின் காரணமாக முடி உதிர்வு பிரச்சினை ஏற்படுகின்றது.

நாம் சாப்பிடும் உணவுகளில் நெய் எடுத்துக்கொள்வோம். ஆனால் அதில் எந்தவிதமான சத்துக்கள் உள்ளன என்பதை பற்றி யாரும் யோசிப்பதில்லை. நெய்யில் வைட்டமின் ஏ மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் வைட்டமின் டி ஆகியவை உள்ளது. இவை நம் உணவில் உட்கொள்ளும் போது முடி உதிர்தலை எதிர்த்துப் போராடுகிறது.

blood flow,fatty acids,ghee,good effect,hair fall,massage , கொழுப்பு அமிலங்கள், நல்ல பலன், நெய், மசாஜ், முடி உதிர்தல், ரத்த ஓட்டம்

நெய்யில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் கூந்தலுக்கு நன்மை தரக்கூடியது. உச்சந்தலையில் ஈரப்பதம் இருந்தால் முடி உதிர்தலை நம்மால் கட்டுப்படுத்த முடியும். உச்சந்தலையில் இரண்டு டீஸ்பூன் நெய்யை எடுத்து மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். பின் இந்த மசாஜ் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடிகளின் ஆயுள் காலத்தை வலுப்படுத்துகிறது.

இதில் இருக்கும் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முடியின் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகின்றது. இனி அதிகப்படியான முடி உதிர்தல் ஏற்படும் பொழுது இதை செய்து பாருங்கள் நல்ல பலன் உங்களுக்கு கிடைக்கும்.

Tags :
|