Advertisement

கைகளுக்கும் அதிகம் கவனம் கொடுத்து பராமரிக்கணும்!!!

By: Nagaraj Tue, 17 Oct 2023 06:45:51 AM

கைகளுக்கும் அதிகம் கவனம் கொடுத்து பராமரிக்கணும்!!!

சென்னை: முகத்தில் காணப்படும் தோலைப் போலவே, கைகளின் பின்புறம் காணப்படும் தோலும் மிகவும் மென்மையானது. எனவே, முகத்தைப் போலவே, கைகளுக்கும் அதிக கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும்.

குறிப்பாக, கைகளில் ஏற்படும் ஈரப்பதம் இழப்பை ஈடு செய்ய, மாய்ச்சரைசர் கிரீம் போன்றவற்றை பயன்படுத்துவதோடு, ரசாயனங்கள் நேரடியாக கைகளில் படுவதையும் தவிர்க்க வேண்டும்.

வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து அதில் கைகளை மூழ்குமாறு, 15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். அதன்பின் கைகளை நன்றாக துடைத்துவிட்டு, கைகளுக்கான கிரீம் தடவ வேண்டும். இது கைகளின் தோலுக்கு ஊட்டமளிக்கும். கிரீம்கள் தடவிய பின், அவற்றின் மேலே கையுறைகள் அணிந்து கொள்வது நல்லது.

கைகளில், இறந்த செல்களை நீக்க கரகரப்பான கிரீம்கள் தடவி அவற்றை நன்கு தேய்க்க வேண்டும். பின், சிறிது நேரம் கழித்து அவற்றை கழுவிய பின், மிதமான ஹேண்ட் வாஷ் தடவ வேண்டும்.

hands,skin wrinkles,aging appearance,protection ,கைகள், தோல் சுருக்கம், வயதான தோற்றம், பாதுகாப்பு

அவற்றை மிதமான தண்ணீரால் கழுவ வேண்டும். இதனால் கைகளில் ரத்த ஓட்டம் சீராகும். மிருதுவான துணியால் கைகளை துடைத்த பின், ஹேண்ட் லோஷன் தடவ வேண்டும். கைகளை சிறந்த முறையில் பராமரிக்க வாரத்திற்கு ஒரு முறையாவது இவ்வாறு செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

மிகவும் குளிர்ந்த பிரதேசத்தில் வசிப்பவர்கள், கைகளுக்கு கம்பளி உறைகள் அணிந்து, கைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

சன்ஸ் கிரீன்: வயதாவதால், தோலில் சுருக்கம் மற்றும் கோடுகள் போன்றவை ஏற்படும். சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் நேரடியாக தோலில்படுவதால், விரைவிலேயே வயதான தோற்றம் ஏற்படுகிறது. இவற்றில் இருந்து சன்ஸ்கிரீன்கள் பாதுகாப்பு அளிக்கின்றன. எனவே, தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால், இவை, தடுக்கப்படும்.

Tags :
|