Advertisement

சரும வறட்சியை தடுக்க உதவும் திராட்சை சாறு

By: Nagaraj Sun, 20 Nov 2022 9:51:44 PM

சரும வறட்சியை தடுக்க உதவும் திராட்சை சாறு

சென்னை: திராட்சை சாற்றை முகத்திலும், கழுத்திலும் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவினால் சருமம் ஈரப் பதத்துடன் காணப்படும். இதனை தினமும் செய்து வந்தால் சரும வறட்சியை தடுக்கலாம்.

பாதாம் பருப்பில் உள்ள சத்துக்கள், குழந்தை இன்மை குறைபாட்டினை நீக்கி, பெண்களின் லிபிடோ சக்தியை ஊக்குவிக்கிறது. சோயா பீன்ஸ்சில் உள்ள சத்துக்கள், பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கிறது, உயர்தர புரதம் அடங்கியுள்ளது. இது மெனோபாஸ் காலத்தில், பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் போன்றவைகளை குறைக்கிறது.

தாய்பால் சுரக்காத பெண்கள், வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை மேற்கொள்ளலாம். அதிமதுரம் பொடியுடன், சிறிதளவு சர்க்கரை, பால் என மூன்றையும் கலந்து 2 வேலை குடித்து வந்தால், தாய்பால் பெருகும்.

mustard,turmeric,seiyakal powder,lentils,belly meat,beauty ,கடுக்காய், மஞ்சள், சீயக்காள் தூள், பருப்பு, அடிவயிறு சதை, அழகு

குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி, அதனுடன் கருப்பட்டி கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும்.

பச்சை பயிறு மாவுடன், தேன் மற்றும் பன்னீர் சேர்த்து கலந்து முகத்தில் போட்டு, அரை மணி நேரம் ஊற வைத்து கழுவினால் முகம் பளிச்சிடும். பெண்களின் வயிற்று சதை குறைய: சின்ன வெங்காயத்தை பசு நெய்யில் வதக்கி, நன்கு மெழுகு போல் அரைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை என தினமும் இருவேளை, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.

காதில் கம்மல் போடும் இடத்தில் புண் இருந்தால் கடுக்காய் மற்றும் மஞ்சளை அரைத்து பூசி வர விரைவில் புண் ஆறி விடும். தயிரை தலைக்குத் தேய்த்து ஊறிய பின் சீயக்காய் தூள் போட்டுக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்.

Tags :