Advertisement

உடல் சருமத்தின் அழகை மெருகேற்ற உதவும் திராட்சை பழம்

By: Nagaraj Wed, 22 June 2022 08:36:38 AM

உடல் சருமத்தின் அழகை மெருகேற்ற உதவும் திராட்சை பழம்

சென்னை: திராட்சைப்பழத்தின் நன்மை... உடல் சருமத்தின் அழகை மெருகேற்றி பொலிவடையச் செய்யும் வலிமை திராட்சை பழத்தில் உள்ளது.

திராட்சை பழத்தில் பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை அதிக அளவில் உள்ளன. எனவே இப்பழத்தில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் சக்தி அபரிமிதமாக உள்ளது. திராட்சை பழம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

முகம் கருத்துவிட்டதா கவலை வேண்டாம். திராட்சை பழச்சாற்றை பிழிந்து அதன் சக்கையை முகம் முழுவதும் பூசி, சிறிது நேரத்திற்கு பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால், கருமை நீங்கி பொலிவு பெறும். திராட்சை சாறில் அதிக அளவு ஆண்ட்டிஆக்சிஜன் உள்ளது. அது சருமத்தை சுத்திகரித்துவிடும். இரத்தத்தில் உள்ள செல்களை அதிகப்படுத்தி சருமத்தை சுத்தம் செய்து பொலிவடையச் செய்துவிடும்.

blackheads,skin,algae,grapefruit,heatstroke ,
கரும்புள்ளிகள், சருமம், பாசிப்பயறு, திராட்சைப்பழம், வெப்பக்கட்டி

திராட்சை பழச்சாற்றில் சூரிய வெப்பத்தால் தாக்கக்கூடிய சரும பாதிப்புக்கள் மற்றும் வெப்பக் கட்டிகளிலிருந்து பாதுகாக்கும் தன்மை உள்ளது. திராட்சை சாறு சருமப் பிரச்சனைகளைத் தடுக்கும் சக்தி கொண்டது. வெயில் காலத்தில் தினமும் ஒரு கப் திராட்சை சாறு அருந்தினால் சருமச் சிக்கலை தவிர்க்கலாம்.

திராட்சை பழச்சாறு இறந்த செல்களை நீக்கும் திறன் கொண்டது. இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் கொண்டதால், சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து வரட்சியிலிருந்து காக்கிறது.

திராட்சை சாற்றை முகத்திலும் கழுத்திலும் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவினால் சருமம் ஈரப் பதத்துடன் காணப்படும். இதனை தினமும் செய்து வந்தால் சரும வறட்சியை தடுக்கலாம். கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தால், ஒரு திராட்சை பழத்தை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் கருவளையம் நீங்கிவிடும்.

சிறிதளவு திராட்சை சாருடன், சிறிதளவு பாசிப்பயிறு மாவை சேர்த்து நன்றாக கலந்து, அதை முகத்தில் பூசி 15 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவேண்டும். இவ்வாறு தொடர்ந்து வாரம் இரு முறை வீதம் 1 மாதகாலம் செய்துவந்தால் சருமத்தில் உள்ள கரும் புள்ளிகள் படிப்படியாக மறைந்துவிடும்.

Tags :
|
|