- வீடு›
- அழகு குறிப்புகள்›
- அழகை மேம்படுத்தவும் உதவுகிறது கிரீன் டீ
அழகை மேம்படுத்தவும் உதவுகிறது கிரீன் டீ
By: Nagaraj Fri, 02 Oct 2020 10:26:27 AM
கிரீன் டீ உடலுக்கு மட்டுமல்ல அழகை மேம்படுத்தவும் உதவும். எண்ணெய் பசை, வறண்ட சருமம் என எந்த வகையான சருமத்தையும் அழகாக்கும் தன்மை கிரீன் டீக்கு உண்டு.
இந்த கிரீன் டீ பேக் பொருளை கொண்டு சருமத்தின் ஒட்டு மொத்த அழகையும், நிறத்தையும் மேம்படுத்திவிடலாம். முகப்பரு அடிக்கடி வருபவர்கள் கிரீன் டீத்தூளை வைத்து பேஸ் ஃபேக் போட்டால் பருக்கள் போயே போச்சு. முகத்தில் வடியும் எண்ணெய் சுரப்பை குறைக்க உதவுவதாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சருமத்தை ஈரப்பதமாக்ககூடிய குணங்களும் கிரீன் டீயில் உண்டு. தொடர்ந்து 15
நாட்கள் வரை கிரீன் டீ சாறை முகத்தில் தடவி வந்தால் வறட்சியான முகமும்
ஈரப்பதம் கொண்டு மென்மையாக மாறும்.
மேலும் தோல் சம்பந்தப்பட்ட தோல்
சிவப்பு, அழற்சி வீக்கம், எரிச்சல் போன்றவற்றையும் சரி செய்கிறது.
முகத்தில் தேங்கியிருக்கும் பழைய செல்களை அகற்றி சருமத்தை சுத்தம்
செய்கிறது. இதனால் முகம் பொலிவடைகிறது.
முகத்தில் நெற்றியில்
சுருக்க கோடுகள், வயதான தோற்றத்துக்கான அறிகுறிகள் தெரிந்தால் உடனே கிரீன்
டீ பராமரிப்புக்கு மாறிவிட பழைய அழகு முகத்தில் குடிகொள்வதை கண் கூடாகக்
காணலாம்.