Advertisement

கூந்தல் ஆரோக்கியத்திற்கு சில டிப்ஸ் உங்களுக்காக!!!

By: Nagaraj Mon, 27 Mar 2023 11:08:39 PM

கூந்தல் ஆரோக்கியத்திற்கு சில டிப்ஸ் உங்களுக்காக!!!

சென்னை: கூந்தல் ஆரோக்கியத்திற்கு டிப்ஸ்... தினமும் குளிப்பது பல் துலக்குவது போல தினமும் இரண்டு முறை தலை சீவ செய்ய வேண்டும் என்றும் அப்போது தான் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

காலை ஒரு முறை இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு முறை என தினமும் இரண்டு முறை தலை முடியை சீவினால் தலைமுடி பாதுகாப்பாக இருக்கும் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். தினமும் இரண்டு முறை தலை சீவினால் இறந்த சரும செல்கள், ஹேர் ப்ராடக்டின் மிச்சங்கள், அழுக்கு, முடி மற்றும் உச்சந்தலையில் உள்ள மற்ற படிந்துள்ள ஆகியவை சுத்தமாகும்.

hair combing,healthy , இரண்டு முறை, கூந்தல், வளர்ச்சி

மேலும் தலைமுடியை சீவினால் அது கூந்தலின் அளவை அதிகரிக்கப்பதோடு, தலைமுடி ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். என்னதான் அவசரமாக இருந்தாலும் ஈரத்துடன் தலையை வாரக்கூடாது.டவலால் நன்கு துடைத்து ஈரம் போய் தலைமுடி காய்ந்த பின்பு நல்ல தரமான சீப்புகளால் தலைசீவ வேண்டும் மாதம் ஒரு முறை கூந்தலின் அடிப்பகுதியை ட்ரிம் செய்து கொண்டால் வெடிப்பு விழாமல் தடுக்கலாம்.

இரவு படுக்கும்முன் கூந்தலை மென்மையாக வாரிவிட்டு படுக்க வேண்டும். இது தலைமுடி நன்கு வளர உதவும் கூந்தலை ப்ளீச் செய்வது கலர் பண்ணுவது, சுருளாக்குவது, நீளமாக்குவது போன்றவற்றை ஏதாவது விழா, விசேஷத்துக்கென்று செய்யலாமே தவிர, அடிக்கடி செய்யக் கூடாது. ஹேர் ஸ்ப்ரே உபயோகித்திருந்தால் இரவு படுக்கும் முன் தலையை அலசுவது நல்லது. அசதியாக இருந்தால் மறுநாளாவது அலசிவிட வேண்டும்.

Tags :