Advertisement

முகம் பிரகாசிக்க... ஜொலி, ஜொலிக்க சில இயற்கை அழகு குறிப்புகள் உங்களுக்காக

By: Nagaraj Fri, 06 Oct 2023 1:46:30 PM

முகம் பிரகாசிக்க... ஜொலி, ஜொலிக்க சில இயற்கை அழகு குறிப்புகள் உங்களுக்காக

சென்னை: அழகை பேணி காப்பதில் யாருக்கு தான் ஆசை இருக்காது. அதிலும் பெண்களுக்கு. இயற்கையிலேயே கிடைக்கும் பொருட்களை கொண்டு எப்படி பொலிவிழந்த சருமத்தை இளமையாக்கலாம்.

இயற்கையிலேயே கடலை மாவிற்கு அழகூட்டும் தன்மை உள்ளது. இது பொலிவிழந்த சருமத்தை அழகாக்க முக்கிய பங்கு வகிக்கிறது. பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும் தன்மை கடலை மாவிற்கு உண்டு. தினமும் முக அழகிற்கு, கடலை மாவு பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை உணரலாம்.

chickpea flour,paneer,skin,smooth and shiny ,கடலை மாவு, பன்னீர், சருமம், மிருதுவாக இருக்கும், ஜொலிக்கும்

கடலை மாவில் சிறிது நீரை கலந்து, முகத்தில் பூசி கொள்ளுங்கள். நன்கு உலர்ந்த பின்பு குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இவ்வாறு செய்து வருவதனால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும். குளிக்கும் போது சோப்பிற்கு பதில் கடலை மாவை பயன்படுத்தி வந்தால், சருமம் மிருதுவாக இருக்கும்.

கடலை மாவுடன், மஞ்சள் மற்றும் 1 ஸ்பூன் பன்னீர் கலந்து முகத்தில் பூசி கொள்ளுங்கள். பிறகு 20 நிமிடம் கழித்து, முகத்தை கழுவினால் முகம் பிரகாசமாக ஜொலிக்கும்.

திருமணம் போன்ற விஷேச நாட்களுக்கு முதல் நாள், கடலை மாவு, மஞ்சள் கலந்த முக அழகு குறிப்பினை பயன்படுத்தினால் முகம் பேசியல் செய்ததற்கு இணையாக ஜொலிக்கும்.

Tags :
|
|