- வீடு›
- அழகு குறிப்புகள்›
- சருமத்தை பாதுகாக்க சில ஆலோசனைகள் உங்களுக்காக!!!
சருமத்தை பாதுகாக்க சில ஆலோசனைகள் உங்களுக்காக!!!
By: Nagaraj Tue, 11 Oct 2022 10:50:34 AM
சென்னை: சருமத்தை பாதுகாக்கும் வழிகள்... 30 வயதை எட்டுவது என்பது ஒரு முக்கியமான மைல்கல். வயது கூட கூட, புதிய சரும பிரச்சனைகள் ஏற்படலாம். 25 வயதுக்கு மேலே, உங்கள் சருமத்தில் நீங்கள் கவனித்த மெல்லிய சுருக்கங்கள் இப்போதுகொஞ்சம் ஆழமாகலாம். உங்கள் தோல் விரைவாக ஈரப்பதத்தை இழந்து, மெல்லியதாகவும், கரடுமுரடானதாகவும் மாறும். அதனால்தான் 30 வயதில் உடல் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
தண்ணீர்: நிறைய தண்ணீர் குடித்தால், உடலும், சருமமும் ஆரோக்கியமாக இருக்கும். உங்களைப் புத்துணர்ச்சியுடன் வைக்கவும் இது அவசியம்.
எக்ஸ்ஃபோலியேட்: ஒவ்வொரு 2-4 வாரங்களுக்கும் உங்கள் தோல் அதன் மேற்பரப்பில் குவிந்திருக்கும் இறந்த செல்களை உதிர்த்துக்கொண்டே இருக்கிறது. இந்த செல்களை அகற்றாவிட்டால், இவை உங்கள் சருமத்தை மந்தமானதாகவும், கருமையாகவும், மற்றும் வறண்டதாகவும் மாற்றிவிடும்.
எனவே, வாரத்திற்கு ஒருமுறை எக்ஸ்ஃபோலியேட் செய்வது மிகவும் முக்கியம்.
இதற்கு நீங்கள் ஸ்க்ரப்களை பயன்படுத்தலாம். ஆனால், வாரத்திற்கு இரண்டு
முறைக்கு மேல் எக்ஸ்ஃபோலியேட் செய்ய வேண்டாம். அதிகப்படியாக இதை செய்தால்,
தோல் எரிச்சல் ஏற்படும்.
சன்ஸ்கிரீன்: எந்த
பருவநிலையாக இருந்தாலும், கண்டிப்பாக சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும்.
இது புற ஊதாகதிர்களில் இருந்து உங்களைக் காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல்,
சருமம் வயதான தோற்றமளிப்பதிலிருந்தும் உங்களை பாதுகாக்கிறது. குறைந்தபட்சம்
SPF 30 மற்றும் PA+ மதிப்பீட்டைக் கொண்ட சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்.