Advertisement

உதட்டை சிவப்பாக மாற்ற இயற்கை வழியில் சில ஆலோசனைகள் உங்களுக்காக

By: Nagaraj Sat, 04 Feb 2023 9:58:38 PM

உதட்டை சிவப்பாக மாற்ற இயற்கை வழியில் சில ஆலோசனைகள் உங்களுக்காக

சென்னை: இயற்கை முறையில் உதட்டை சிவப்பாக மாற்ற சில டிப்ஸ் உங்களுக்காக.

ரோஜா மற்றும் பால்: பாலில் சில ரோஜா இதழ்களை எடுத்து இரவில் ஊற வைத்துவிடுங்கள். மறுநாள் காலை ரோஜா இதழ்களை எடுத்து கொஞ்சம் பால் ஊற்றி மைய பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளுங்கள். பின் அதை உதட்டில் பேக் போல் அப்ளை செய்து 15 நிமிடங்கள் ஊற வைத்து கழுவிவிடுங்கள். இதை தினமும் செய்து வர உதட்டின் நிறம் இயற்கையாகவே சிவப்பாக மாறும்.

பீட்ரூட் சாறு: பீட்ரூட் சாறை தேனில் நன்கு கலந்து அதை உதட்டில் தினமும் தடவி வர உதடு சிவப்பாகவும் பொலிவுடனும் இருக்கும். தேன் மற்றும் சர்க்கரை: தேனில் சர்க்கரை கலந்து உதட்டில் தடவி ஸ்கிரப் செய்யுங்கள். இதனால் உதட்டில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். உதட்டிற்கு எண்ணெய் பதமும் கிடைக்கும். இதனால் உதட்டின் கருமை நிறம் மாறி மென்மையாகவும் சிவப்பாகவும் இருக்கும்.

natural method,lips,red,almond oil,beetroot extract ,இயற்கை முறை, உதடுகள், சிவப்பு, பாதாம் எண்ணெய், பீட்ரூட் சாறு

மஞ்சள் மற்றும் பால்: மஞ்சளுடன் பால் கலந்து பேஸ்ட் போல் குழைத்துக்கொள்ளவும். பின் அந்த பேஸ்ட்டை உதட்டில் அப்ளை செய்து காயும் வரை அப்படியே விட்டுவிடுங்கள். காய்ந்து அதுவாகவே உதிர்த்து விழும்போது கழுவிவிடுங்கள். இரவு தூங்கும் போது செய்து வந்தால் நல்ல மாற்றம் ஏற்படும்.

பன்னீர் ரோஜா இதழ்கள் 20 கிராம் (அரைத்தது), பசுவின் பால் 1 தேக்கரண்டி, இவை இரண்டையும் நன்றாக கலந்து, தினமும் உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் சிகப்பாகவும், மிருதுவாகவும் காட்சியளிக்கும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய்யை சம அளவு கலந்து தினமும் தூங்க செல்வதற்கு முன் உதடுகளில் தடவ வேண்டும். இது உதடுகளை சிவப்பாகவும் மென்மையாகவும் மாற்றுகிறது.

Tags :
|
|